முள்றியின் டைரி

முள்றியின் டைரி: 9 அ….து……தமிழன்னா அந்தப் பயம் இருக்கணும்….

இது நடந்தது 1998 – ம் வருடம் – நைரோபியில். என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்று டாக்டரிடம் போய் காண்பித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். ஏகப்பட்ட ட்ராஃபிக். ஏதோ ஒரு விஜய் படத்தில் விஜய்யும் விவேக்கும் Road Diversion என்று அங்கே போய் இங்கே போய் கடைசியில்...

முள்றியின் டைரி 8 : EXCUSE ME…WHAT DID YOU SAY?

அப்போ நான் கென்யா வந்த புதுசு. A Typical Bachelor. அப்போது என்னிடம் ஒரு SUZUKI Sports Car இருந்தது – 4 Wheel Drive. கிட்டக்க வந்தா அறைஞ்சிருவேன் என்று சொல்கிற மாதிரி ஒரு வெறிக்கிற சிவப்புக் கலர். ஆனால் அதில் உள்ள Music System சூப்பராக இருக்கும். Technics Make. வெறும்...

முள்றியின் டைரி – 7 Cooking கொஞ்சம் சொல்லித் தாங்க பாலா சார்…..

அப்போது நான் தாஷ்கெண்டில் படித்துக் கொண்டிருந்தேன். அன்று என் அறைத் தோழனுக்கு பிறந்தநாள். அங்கு நாங்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவது பிறந்தநாளும் ஆங்கிலப் புத்தாண்டும் மட்டும்தான். எனக்கு நன்றாக சமைக்கத் தெரியும். இதைப் படிக்கும் என் தாஷ்கெண்ட் நண்பர்கள் அதை உறுதி...

முள்றியின் டைரி – 6 ஐயோ பாவம் யாரு பெத்த புள்ளயோ……

எனக்கு கடந்த 2 மாதமாக ஒரு வினோதமான உபாதைங்க. கண்ணு பயங்கரமாக பொங்கி பொங்கிக் கண்ணீராகக் கொட்டித்தள்ளுகிறது.உடம்பு ஹீட்டாகி இருக்கிறதுக்கும் சான்ஸ் இல்லை. ஏனென்றால், நான் குளிர்காலத்தில் கூட தினமும் குளிர்ந்த தண்ணீரில் தலைக்கு குளிக்கும்...

முள்றியின் டைரி – 5 எங்கே போகணும்னு தெளிவாச் சொல்லு மூதேவி…

1989 - ம் வருடம். நான் ரஷ்யாவில் படித்துக் கொண்டிருந்தேன். என் அப்பா இறந்து 6 மாதமாகி இருந்தது. என் அம்மாவும் சின்ன அண்ணனும் காரைக்குடியில் தங்கியிருந்தார்கள்.அப்போது என் அண்ணனிடம் இருந்து ஒரு கடிதம். கடிதம் வேண்டாம், லெட்டர்னு வெச்சுக்கலாமா? வேண்டாம், கடிதமே...

முள்றியின் டைரி : 4 நண்பர்களுக்கு சந்தோஷமான ஒரு சமாச்சாரம்

இன்று கொஞ்சம் கூட எதிர்பாராத ஒரு நேரத்தில் BBC-யில் இருந்து ஒரு ஃபோன். என் பெயர், முகவரி, என் Hobby எல்லாம் கேட்டு சரி பார்த்து விட்டு, நாங்கள் Masai Mara-வில் African Cats- Part II Documentary Movie பண்ண வேண்டும், 3 மாதம் Project எங்களுடன் சேர்ந்து பணி புரிய இயலுமா...

முள்றியின் டைரி – 3 படித்ததும் ரசித்ததும்…..

நான் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தது ..…. 4-வது படிக்கும்போது என்று ஞாபகம். அப்போது அணில், முயல் என்ற சிறுவர் புத்தகங்கள் வரும். நானும் என் அண்ணனும் வீட்டில் தின்பண்டம் வாங்க கொடுக்கும் காசை சேர்த்து வைத்து அந்த புத்தகங்களை வாங்குவோம் (படம் பார்ப்பது எல்லாம் படித்தது...

முள்றியின் டைரி : 2. இது நம்பிக்கையா, மூட நம்பிக்கையா இல்லை குருட்டு நம்பிக்கையா?

நான் என் தொழிற்சாலைக்கு ஒரு Store Keeper – ஐத் தேடிக்கொண்டிருந்தேன் (தொழிற்சாலை என்ன வெங்காயத் தொழிற்சாலை. 50 பேர் பணி புரியும் ஒரு எவர் சில்வர் பட்டறை). நான் மணல் கயிறு S.Ve. சேகர் போல எட்டு கண்டிஷனெல்லாம் போடவில்லை. மூணே மூணுதான் போட்டேன். Basic Accounting &,...

முள்றியின் டைரி : 1 அடச்சே… டம்மி பீஸ்…..

நான் 3 வருடங்களுக்கு முன்னால், என் வேலை விஷயமாக துருக்கி ( Turkey) செல்ல நேர்ந்தது ( எனக்கு ஏழரை நாட்டுச் சனி உச்சத்தில் இருந்த நேரம்).என் அலுவல் எல்லாம் முடிந்தவுடன், வழக்கம்போல் என் கேமராவை எடுத்துக் கொண்டு அங்குள்ள கோட்டை கொத்தளங்களை புகைப்படம் எடுக்கக்...