பிரான்மலை….

இந்த மலையே பாரி மன்னன் ஆண்ட பறம்பு மலை என நம்பப்படுகிறது. சங்க காலப் புலவர் கபிலர் பாரி மன்னனை குறிஞ்சியை ஆண்ட முருகனின் 42வது தலை முறை என்கிறார். அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் , இதுவே முருகனும் தலைவனாக இருந்து ஆட்சி செலுத்திய இடம். (சும்மா இருக்கட்டுமே என்று இந்த இடத்தில் நிறைய இடங்களில் என் கை மட்டும் கால் ரேகைகளை பதித்து விட்டு வந்தேன்-அந்த இடங்களில் ஏதேனும் ஒன்றிலும் பாரியின் கையும் பட்டிருக்கும் என்ற நப்பாசையில் ) .

நீங்கள் இந்தப் படத்தில் காணும் கோயில் மூன்று அடுக்குகளாக உள்ளது. மூன்றிலும் சிவ பெருமானே முதன்மைக் கடவுள். மூன்றாவ்து அடுக்கிலிருக்கும் சிவபெருமான் தாம்பத்ய உறவில் இருப்பதால் உள்ளே விளக்கு வெளிச்சம் எதுவும் கிடையாது. இது ஒரு குடைவரைக் கோயில் . இந்த மூன்றாவது அடுக்கு மட்டும் கிபி.எட்டாவது நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம்.

மலையின் உச்சியில் ஒரு முருகன் கோயிலும் அதற்கு அருகில் ஒரு இஸ்லாமிய தர்காவும் உள்ளன. அதற்கு ஒரு லெவல் கீழே ஒரு சித்தரின் சமாதியும் உள்ளது.

இது சிங்கம்புனரியிலிருந்து 10 கிமீ தூரத்தில் உள்ளது. மதுரையிலிருந்து 1 1/2 மணி நேரப் பயணம்.

கண்டிப்பாக அனைவரும் காண வேண்டிய ஒரு இடம்.

வெ.பாலமுரளி