இடம் : கே.புழுதிப்பட்டி, துவரங்குறிச்சி அருகில்.
கேரளாவில் இருந்து ஒருவர் இங்கு வந்து இந்தக் கோயிலைக் கட்டினார் என்று சொல்லப்படுகிறது. எனவேதான் மலையாள சாத்தன் என்ற பெயர்.
இதுவே நான் பார்க்கும் முதல் குடிசைக் கோவில்.
ஆனால், டிப்பிக்கல் ஐயனார் கோயில். நிறைய மண்குதிரைகளையும், யானைகளையும், காளைகளையும், நேர்த்திக் கடனுக்காக வைக்கப்படும் மண்ணில் செய்த மனித உருவங்களையும் காண முடிகிறது.
இங்குள்ள ஐயனார் பூ மாலை, எலுமிச்சை மாலை, குங்கும் போன்ற அலங்காரத்தில் இருப்பதால், சிலையின் காலத்தை கணிக்க இயலவில்லை.
ஆனால், இது ஒரு வித்தியாசமான கோயில் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
வெ.பாலமுரளி






