சமணர்களின் கழுவேற்றம் ஒரு பார்வை


எழுதியவர் : கோராவில் அ.மோகன்
கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், எண்ணைதடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும்,நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். கழுமரம் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் அதனைக் கழுமரம் என்று குறிப்பிட்டனர். இரும்புக் கழுவும் இருந்தது. இந்த இரும்புக் கழுமரத்தை வெங்கழு என்று குறிப்பிட்டனர்.சமணர் கழுவேற்றம் :சமணம் தழைத்தோங்கி இருந்த காலகட்டம் அது , வைதீக மதம் நலிந்து வேதத் தொழில் பாதிப்புக்கு உள்ளானது , சோழ நாடான சீர்காழியில் சிவபாத விருதையர்-பகவதி ஆகிய ‘பிராமண’ வைதிக தம்பதிகளுக்குப் பிறந்தவர் சம்பந்தர் , தனது தந்தையாரின் கலக்கத்தை தமிழ் கற்ற மகன் தேற்றுகிறான் , “அப்பா அழாதே, எவ்வாறாயினும் இந்த சமணப் பூண்டை வேரறுக்க நமது குடும்பம் தியாகம் செய்ய வேண்டுமே தவிர, புலம்புவதால் பயனில்லை” என்று தேற்றினார் , அவர் இவ்வாறு சூளுரைத்து வீட்டை விட்டு கிளம்புகிறார் ….சம்பந்தர் தனது மதுரைப்பாடல்களில் :”வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே…””அந்த ணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச்சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே…””வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே…”மேலே உள்ள வரிகள் மூலம் திருஞானசம்பந்தர் சமணர்களை வெறுத்தார் என்று தெரிய வருகிறது. ஆனால் எதற்கு அவர்களை வெறுத்தார் என்பதே நாம் அறிய வேண்டியது. சமணர்கள் வேத வேள்விகளை மதிப்பதில்லையாம்… அந்தணர்கள் சொல்லையும் கேட்பதில்லையாம்…அதனாலே திருஞானசம்பந்தர் அவர்களைச் சாடுகின்றார். அதனாலையே சாடுகின்றாரே தவிர அவர்கள் சைவத்தினை மதிப்பதில்லை என்பதற்காக சாடவில்லை.வேதத்தையும் வேள்வியையும் திட்டிக் கொண்டு திரியும் பயனற்றவர்களான சமணர்களையும் பௌத்தர்களையும் நான் வாதத்தில் வென்று அழிக்க விரும்புகிறேன் என்கிறார்.நின்றசீர் நெடுமாறன் என்கிற கூன் பாண்டியன் (கிபி 640–670) சமணத்தை தழுவியிருந்தான் அவனது மனைவி மங்கையற்கரசி மற்றும் மந்திரி குலச்சிறை தீவிர சைவர்களாக இருந்தனர் , எப்படியாவது பாண்டியனை சைவ மதத்திற்கு மாற்றும் பொருட்டு சம்பந்தரை அழைத்தனர் , கூன் பாண்டியனுக்கு சூலை நோய் (வயிற்று வலி) வரும்படி செய்து அதற்கான மாற்று மருந்தை ராணியின் கையால் கொடுக்க செய்தார் சற்று நேரத்தில் அவர் மீது திருநீறு பூசி அதன் காரணமாக வயிற்று வலி நீக்கியதாக நாடகமாடினார் , இந்த விவரம் தெரியாத சமணர்கள் அவரது வயிற்று வலியை இன்னதென்று புரியாமல் நீக்க முடியாமல் திணறினர்.மந்திரமாவது நீறு! வானவர் மேலது நீறு!சுந்தரமாவது நீறு! தந்திரமாவது நீறு! …இந்த இடத்தில் சமணர்கள் குறுக்கிட்டதால் சமயத்தில் உதவுவது திருநீறு என்று சொல்லி அள்ளி பூசுகிறார் , மாற்று மருந்து ராணியார் கொடுத்ததால் வயிற்று வலி நீங்கப்பெற்றார்.அடுத்து அனல்வாதம் செய்ய சமணர்களை அழைத்தார் , அதன் படி ஒரு ஓலையில் தங்கள் மதம் சார்ந்த குறிப்புகளை எழுதி அதை நெருப்பில் போட வேண்டும் , சமணர் இட்ட ஓலை எரிந்து கருகியது , சம்பந்தர் “போகமார்த்த ..” என்ற பாடல் எழுதிய ஓலை எரியாமல் அப்படியே இருந்தது , கந்துசேனர் குறுக்கிட்டு அந்த அதிசயமான சைவ ஓலையை அனைவரிடமும் காட்டு என்கிறார் , சம்பந்தர் தயங்க கந்துசேனர் அதை தரையில் பிடுங்கி எறிகிறார் , அது இரும்பு தகடினால் எழுதப்பட்ட ஓலை , இதை வைத்து தான் “தகிடுதத்தம்” என்ற வழக்கு உண்டாயிற்று. இப்படி சமணர் ஓலைகளை அழித்து முடித்தார்.அடுத்து புனல் வாதம் இது தான் இறுதி இதில் தோற்பவர் கழுவேற்றப்பட வேண்டும் என்கிறார் சம்பந்தர், சமணர் “அத்தி நாத்தி ” என்றெழுதிய ஓலை தண்ணீரில் மூழ்கவே , சம்பந்தர் தன் “வாழ்க அந்தனர் ..” என்று தொடங்கும் பாடல் ஓலையை இடுகிறார் அதுவும் மூழ்கவே , மந்திரி குலச்சிறை அந்த ஓலை தண்ணீரில் எதிர்த்து வேகமாக நீந்துவதாக சொல்லி அந்த ஓலையை பின்தொடர்வதாக சொல்லி தன் குதிரையில் கிளம்புகிறார் திரும்பி வந்து அதே பாடல் கொண்ட ஒரு பிரதி ஏட்டை காட்டி திருவேடகம் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருவடிக்கருகில் சென்று ஏடு அப்படியே நின்றுவிட்டது என்றும் கதை விடுகிறான். பாண்டியனும் நம்புகிறான் தன் சூலை நோய் தீர்ந்ததிலேயே சம்பந்தன் பக்கம் சாய்ந்திருந்த பாண்டியன் மந்திரி சொன்னதை உண்மை என்று ஏற்றான் , சமணர்கள் கண் முன்னே நடந்த மோசடியை நிரூபிக்க முடியாமல் திண்டாடினர் , கழுவேற்றம் நிகழ்ந்தது. சமணர் குடும்பங்களை ஆங்காங்கே அழிக்க உத்தரவு பறந்தது , மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த விவரம் தெரிந்த பலர் உத்திராட்ச கொட்டை திருநீறு அணிந்து சிவசிவா என்று சொல்லி தப்பினர், சிலர் சொக்கநாதர் கோயிலுக்குள் சென்று மதம் மாறி விட்டதாக அறிவித்தனர் , விசயம் தெரியாத சமணர்கள் ஏன் கொல்லப்படுகின்றோம் என்று தெரியாமலேயே கழுவேற்றப்பட்டனர்.“சம்பந்தர் : குழந்தை, குட்டிகள், பெண்டுகள், பெரியவர்கள் என்று பார்க்க வேண்டாம். சமணப் பூண்டு ஒன்றுகூட இருக்கக் கூடாது! நாங்கள் பார்க்க வருவோம்” என்று உத்தரவிடுகிறார்.மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 8000 சமணர்களை கழுவேற்றியதாக பெரியபுராணம் கூறுகின்றது , அதோடு அல்லாமல் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், ஒட்டக்கூத்தர் என்று பின்னர் வந்த சமய அறிஞர்கள் கழுவிலேற்றிய நிகழ்வு நடந்ததாகவே எழுதி வைத்திருக்கிறார்கள்.மதுரை சித்திரை திருவிழா ஆறாம் நாளின் போது அங்கே கழுவேற்ற வரலாறு பாடலாக ஓதப்படுகிறது , திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழாவின் போதும் சைவ ஸ்தாபித வரலாறான கழுவேற்றம் ஓதப்படுகிறது, திருமங்கலம் பத்திரகாளியம்மன் திருக்கோயிலிலும் வைகாசி மாத திருவிழாவில் ஆறாம் நாள் திருவிழாவாக கழுவேற்றம் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது, இதை கொண்டாட நியாயமான ஒரு கதை இருக்க வேண்டுமல்லவா ? சமணர்கள் கொடுமை செய்பவர்கள் அல்லவே அப்புறம் எப்படி ? , அதற்கு தான் , சமணர்கள் சம்பந்தரை தீயிட்டு கொளுத்த திட்டமிட்டதாகவும் , அதிலிருந்து தப்பி மன்னரின் சூலை நோயை தீர்த்து காத்ததாகவும் அதோடு திருநீற்றுப்பதிகமும் பாடி சமணரை அனல்-புனல் வாதில் வென்றதாக பெரியபுராணத்தில் கதையாக உள்ளது. பிற்காலத்தில் தனது பதினாறாவது அகவையில் அவருக்கு திருமணம் சீர்காழிக்கு அருகில் உள்ள ஆச்சாள்புர சிவ ஆலய மண்டபத்தில் நடந்த போது அக்கினியை வலம் வருகையில் ஏற்பட்ட தீயில் உண்மையில் சிக்கி மாண்டார் , அதையே சிவனோடு சோதியில் ஐக்கியமானார் என்று கூறி அந்த நிகழ்வை வைகாசி மூலத்தன்று சோதியில் ஐக்கியமான திருமண விழாவாக அவருக்கு நடத்துகின்றனர்.வடக்கில் சமணத்தை அசோகர் அழித்தார், சமணர்களின் தலையை கொண்டு வருபவருக்கு வெள்ளி காசுகள் பரிசளித்தான். அவர் வழியில் மோரிய வம்சத்தின் கடைசி வாரிசை ராணுவ அணிவகுப்பின் போது கொன்று பதவிக்கு வந்த படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கா என்ற பிராமணர் பௌத்தர்களை அழிக்க அசோகர் வழியையே பின்பற்றினார், வைதீக மதம் இவர் காலத்தில் தான் வளர்ச்சியடைந்து நிலை பெற்றது. வடக்கில் அசோகரும் , சுங்கரும் சமண -பௌத்தத்தை அழித்தனர், தெற்கில் சம்பந்தர் அருள் பெற்ற கூன் பாண்டியன் அதே பணியை செய்து முடித்தார். 400 ஆண்டுகள் கழித்து 9, 10 ம் நூற்றாண்டில் அச்ச நந்தி போன்றவர்களால் மீண்டும் சமணம் எழுந்து பிறகு 13,14ம் நூற்றாண்டு வாக்கில் மீண்டும் வீழ்ச்சி அடைந்தது.சிகையுடன் காட்சியளிக்கும் ஆசீவக/சாவக சமணரின் கழுவேற்றம் :📷படம் : கூகுள்ஜைன (அருகர்கள்) சமணர்கள் தான் தலையை மழித்து இருப்பர். ஆசீவகர்களும், சாவகர்களும் (இல்லற சமணர்கள்) நீண்ட சிகையுடன் இருப்பர்.