வேர்களைத் தேடி : 2 – சிறுமலை ஓவியங்கள் -1 

சிறுமலைக்குச் சென்று வந்ததைப் பற்றி என்னுடைய முள்றியின் டைரியில் ஜாலியாக ஒரு முறை எழுதியிருந்தேன். 

ஆனால், அதில் ஓவியங்கள் பற்றி ஏதும் சொல்லவில்லை. அந்தக் குறையை இந்தக் கட்டுரை போக்கும்.

நான் இது வரை நெருக்கி 20 பாறை ஓவியங்கள் இருக்கும் இடங்களைப் பார்த்து விட்டேன் ( தோராயமாக தமிழ் நாட்டில் மட்டும் மொத்தம் 200 இடங்களில் பாறை ஓவியங்கள் உள்ளன). 

நான் பார்த்த இந்த இருபதில் சிறுமலைதான் அற்புதத்தின் உச்சம். 

சிறுமலையிலேயே இரண்டு இடங்களில் பாறை ஓவியங்கள் இருக்கின்றன. நாங்கள் சென்ற முறை மீன் கொத்திப் பாறை என்னும் ஒரு இடத்திற்கு மட்டுமே சென்றோம். அதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை.

இந்த இடத்தின் மிகப் பெரிய சிறப்பு, மற்ற இடங்களைப் போலவே இங்கேயும் தொடர்ச்சியாக மக்கள் நடமாட்டம் இருந்திருக்கின்றது.

ஒவ்வொரு முறையும் புதுப் புது ஓவியங்கள் வரைந்தாலும், பழைய ஓவியங்கள் அழிந்து போகும் நிலையில் இருந்தால், அதன் மேலே புது வண்ணங்களைத் தீட்டி அதையும் புதுப்பித்திருக்கிறார்கள்.  இந்த கான்செப்ட் ஆச்சரியம் மட்டுமில்லை. அதிசயமும் கூட. 

கூர்ந்து கவனித்தால், இந்த ஓவியங்களில் கரியினால் வரைந்த கருப்பில் தொடங்கி, கரும் செஞ்சாந்து, செஞ்சாந்து, வெளிர் சிவப்பு, காவி, மஞ்சள் , வெள்ளை என்று நிறைய வண்ணங்களை இன்றும் காண முடிகிறது. 

வண்ணங்களை வைத்தும், கோடுகளின் தடிமத்தை வைத்தும் “ஓரளவு” காலங்களை ஊகிக்க முடிகிறது ( கி.மு30,000 தொடங்கி கி.மு.2, 000 வரை இருக்க “லாம்” ) . 

சமீபத்தில் தமிழ் ஹிந்துவில் என்னுடைய கட்டுரை ஒன்றைப் படித்து விட்டு, முதியவர் ஒருவர் என்னை ஃபோனில் அழைத்தார். தான் ஒரு ஓய்வு பெற்ற ஆர்க்கிடெக்ட் என்றும், தொல்லியல் தேடல்களிலும் நிறைய ஆர்வம் இருந்ததாகவும் தற்சமயம் உடல் நிலை சரியில்லாதலால் வீட்டில் ஓய்வில் இருப்பதாகவும் கூறினார். 

பேச்சு, பாறை ஓவியங்களைப் பற்றித் திரும்பியதும் எடுத்த எடுப்பிலேயே சிறுமலையைத்தான் குறிப்பிட்டார். 

1970 களின் தொடக்கத்தில் யுனெஸ்கோ கூரியர் என்ற மாத இதழ் ஒன்று தமிழில் வந்து கொண்டிருந்ததாகவும், அதில் வெளி நாட்டு பாறை ஓவிய அறிஞர் ஒருவர் சிறுமலை வந்து ஆராய்ந்து விட்டு, அதில் ஆரம்ப காலத்தில் கரியை வைத்துத்தான் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததாகவும் , அதனை வைத்து இந்த ஓவியங்களை ஏறத்தாழ 30,000ஆண்டுகள் பழமையானவை என்று கூற முடியும் என்றும், இந்திய அரசாங்கம் இதனை முறையாக ஆராய்ந்து இதன் கால அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக எழுதியிருந்ததாகவும்,  அந்தக் கட்டுரையை ஆதாரமாக வைத்து, தான் தொல்லியலில் நிறைய மக்களைச் சென்று சந்தித்ததாகவும், ஆனால் தன் கோரிக்கையை யாருமே கண்டு கொள்ளவில்லை என்றும் மிகவும் வருத்தத்தோடு குறிப்பிட்டார். 

அது மட்டுமல்ல, அவர் சிறுமலைக்குச் சென்று கிட்டத்தட்ட 50 வருடங்கள் ஆகி விட்ட நிலையிலும் அவர் அங்கு உள்ள ஓவியங்களை விலாவாரியாக விவரித்தது , அவர் அந்த ஓவியங்களை எந்த அளவிற்கு ரசித்திருப்பார் என்பதை என்னால் உணர முடிந்தது. 

உண்மை. 

அவை ஒவ்வொன்றும் ஒரு அற்புதம். 

சிந்து வெளியில் “பசுபதி” என்று குறிப்பிடப்படுவது போன்ற ஒரு ஓவியம்.  

ஒரு சிறிய சண்டைக் காட்சியில் ஒருவன் வீழ்த்தப்படுவது போலவும் அந்த வெற்றிக் களிப்பை மற்றவர்கள் கொண்டாடுவது போலவும் ஒரு ஓவியம்.  

வாத்ஸாயணரின் காமசூத்ரா போல நிறைய கலவியல் பொசிஷன்ஸ் ஓவியங்கள் (வெவ்வேறு வண்ணங்களில் வெவ்வேறு காலகட்டத்தில்.  ரசிச்சு வாழ்ந்திருக்காய்ங்கெ). 

ஒரு பெரிய மனிதன் கையில் நீண்ட வாளோடு போருக்கு (சண்டைக்கு) செல்வது போல இன்னொரு ஓவியம்.

 பெண் பிரசிவிப்பது போல் சில ஓவியங்கள். அவை, பெண்கள் படும் வேதனையை மற்றவர்களுக்குத் தெரிவிப்பது போல உள்ளன. 

மருத்துவர்கள் போல மனிதனை தோலுரித்து நெஞ்சுக் கூட்டினை எக்ஸ் ரே ஓவியமாகவும் வரைந்து வைத்துள்ளனர். செத்துப் போன மனிதனை எப்படியும் புதைக்கத்தான் போகிறோம். அதற்கு முன் போஸ்ட்மார்ட்டம் செய்து நம் உடலின் உள்ளே என்ன இருக்கிறது,   எப்படி இருக்கிறது என்று பார்த்து விடுவோம் என்று அனாட்டமி ரிசர்ச் செய்தது போல் உள்ளது. (விழுப்புரத்திற்கு அருகில் ஆலம்பாடி என்னும் இடத்தில் ஒரு அனாட்டமி ரிசர்ச் சென்டரே இருந்தது போல் அவ்வ்வ்வ்வ்வளவு எக்ஸ்ரே ஓவியங்கள். அது பற்றி இன்னொரு வேர்களைத் தேடியில் எழுதுகிறேன்). 

யானை போன்ற சில விலங்குகளின் ஓவியங்கள். 

இன்று நாம் சேவலை வைத்து சண்டைகள் செய்வது அன்று ஏதோ இரண்டு விலங்குகளை சண்டை செய்ய வைத்தது போல ஒரு ஓவியம் ( செம தில்லுதான் நம்ம பாட்டன்ஸூக்கு).

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஜாலியாக ஒரு ஹார்ஸ் ரைட் போவது போல ஒரு ஓவியம் ( அப்பவே டேட்டிங் கான்செப்ட் வந்திருச்சு போல. ம்ஹூம்…..(பெருமூச்சு ).

ஒரு வில்லாளனின் ஓவியம்.

முக்கொம்பு, சூலாயுதம் போன்ற சில குறியீடுகள்.

சிறுமலை ஓவியங்களை மட்டுமே வைத்து ஒரு பி.ஹெச்.டி பண்ணி விடலாம். அந்த அளவுக்கு வெரைட்டி வெரைட்டியான ஓவியங்கள்.

அதன் படங்களை இங்கு இணைத்துள்ளேன். நேரம் கிடைக்கும்போது அனைத்தையும் பொறுமையாக ஒரு முறை பாருங்கள். 

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் சிந்தித்திருக்கிறார்கள் என்பதை நினைத்தால் 

தலை சுற்றும். 

வெ.பாலமுரளி    