உத்தரகோசமங்கை …பரமக்குடிக்கு அருகில் உள்ளது
உத்தரம் – உபதேசம்
கோசம் – ரகசியம்
மங்கை – உமையாள்
உமையாளுக்கு சிவபெருமான் ரகசியமாக உபதேசம் செய்த இடம் என்று பொருள்.
மண்டோதரி இந்தக் கோயிலில் வந்து தவம் இருந்ததாகவும் அதன் பொருட்டே ராவணனுக்கும் , மண்டோதரிக்கும் இங்கு வைத்து சிவபெருமான் திருமணம் செய்து வைத்ததாகவும் வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள்…
ராமாயணம் உண்மையில் நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், ராமாயணம் எழுதப்பட்டது கி.மு. 2500-ல்.
அப்படியென்றால், இந்தக் கோயிலுக்கு 4500 வருட வரலாறு உள்ளது என்று பொருள் கொள்ளலாம்..
இங்கு உள்ள ஸ்தல் விருட்சம் 3000 வருடத்திகும் பழமையானது என்று ஒரு பலகை வைக்கப்பட்ட்டுடுள்ளது.
இங்குள்ள நடராஜர் சிலை மரகதத்தில் செய்யப்பட்டது. அது எளிதில் உடைந்து விடக்கூடியது என்பதால் அதை வருடம் முழுவதும் சந்தனத்தால் அலங்கரித்து வைத்திருக்கிறார்கள். ஆருத்ரா தினம் மட்டும் சந்தனத்தை அகற்றி மரகத்த்ச் சிலைக்கு அபிஷேகம் செய்கிறார்கள்….
இந்தச் சிலை சந்தனத்தால் அலங்கரித்து மூடப்பட்டிருந்த காரணத்தினாலேயே , இது அயல் நாட்டுத் (முக்கியமாக பிரிட்டிஷ்) திருடர்கள் கண்ணில் படாமல் தப்பித்து விட்டது .
தொல்லியல் துறை கண்டு கொள்ளாத நூற்றுக்கணக்கான தமிழகப் பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று..
ஒரு உபரித்தகவல் : மாணிக்கவாசகர் தன்னுடைய முதல் பிறவியில் இங்கு வந்து தவம் இருந்ததாக , தன்னுடைய இரண்டாவது பிறவியில் ஆவுடையார்கோயிலில் வைத்து பாடல் இயற்றியிருப்பதாகக் கூறுகிறார்கள்