முள்றியின் டைரி : 4 நண்பர்களுக்கு சந்தோஷமான ஒரு சமாச்சாரம்

இன்று கொஞ்சம் கூட எதிர்பாராத ஒரு நேரத்தில் BBC-யில் இருந்து ஒரு ஃபோன்.

என் பெயர், முகவரி, என் Hobby எல்லாம் கேட்டு சரி பார்த்து விட்டு, நாங்கள் Masai Mara-வில் African Cats- Part II Documentary Movie பண்ண வேண்டும், 3 மாதம் Project எங்களுடன் சேர்ந்து பணி புரிய இயலுமா என்று கேட்டார்கள். கரும்பு தின்ன கூலியா? யோசிக்காமல் சரி என்று சொல்லி விட்டேன்.

என் கேமரா மற்றும் லென்ஸ் Details கேட்டார்கள். சொன்னேன். அவர்களுக்கு திருப்தி போலத்தான் தோன்றியது. என்னை எப்படித் தெரியும் என்றேன். Flick r-இலும் Face Book-இலும் பார்த்தார்களாம். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவர்களே, உங்கள் Expenses போக இவ்வளவு தொகை தருகிறோம் என்றார்கள். கிட்டத்தட்ட மயக்கமே வந்து விட்டது. என்னை அறியாமலேயே எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்று பதட்டத்துடன் கேட்டேன்.

” என்னத்த ஆரம்பிக்கப் போறீங்க? எந்திரிங்க…. மணி ஏழாச்சு.நேத்து பொறந்த புள்ள அழகா அதுவா எழுந்து School-க்குக் கிளம்பிருச்சு. இத (என்னைத்தான்) நாம வந்து எழுப்பி விட வேண்டியிருக்கு. எல்லாம் என் தலையெழுத்து” என்றாள் என் மனைவி….இந்த கனவு ஒரு நாள் நடக்குமா?

வெ.பாலமுரளி