நண்பர் பால முரளி அவர்கள். அவர் எனக்கு நண்பர் என்பதை விட,நானும் அவருடைய நட்பு வட்டத்தில் உள்ளேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் மதுரை நண்பர்களில் ஒருவர்..
2012ல் நான் நைரோபி வந்தபொழுது பழக்கமான நண்பர்களில் ஒருவராக அறிமுகமானவர் திரு பால முரளி அவர்கள்.
அவருடைய பழகும் தன்மையிலும், அறிவாற்றலிலும், எளிமையிலும்,ஏழைகளுக்கு தன்னால் இயன்ற உதவும் குணத்திலும்,தேசாந்திரி பயண அனுபவங்களாலும், எழுத்தாளர் சுஜாதா போன்று ஆதி மனிதனைப் பற்றியும் நேரெதிராக இன்றைய அறிவியல் தொழில்நுட்ப அறிவிலும் என்னை கவர்ந்த அற்புத மனிதர்களில் ஒருவர்.
அவருடைய எளிய எழுத்து நடைக்கு “முள்றியின் டைரியும்” வரலாற்று அறிவின் தேடலுக்கு “வரலாற்றை தேடியும்” அருமையான சான்று.
அவர் நீண்ட நெடிய ஆயுளுடனும்,தேக ஆரோக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல தாய் மதுரை மீனாட்சியை வேண்டிக்கொள்ளும்.
இயன்ற அளவுக்கு அவரைப் புரிந்து கொண்ட நண்பர்களில் ஒருவன்…