RAW Format என்றால் என்ன ?

தண்ணீர் , சோடா எதுவும் கலக்காமல் RAW வாக அடிக்கிறார்களே, அதே மீனிங் தான் இங்கேயும்.

எதுவும் கலக்காமல், பார்த்ததை பார்த்தபடியே பதிவு செய்யும் ஃபார்மாட் தான் RAW.

ஆம், நீங்கள் எடுக்கும் JPEG Format எல்லாமே, கேமராவில் உள்ள ப்ராஸ்ஸஸர் சிறு சிறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து நீங்கள் எடுத்ததை இன்னும் கொஞ்சம் கெருகேற்றிக் கொடுக்கிறது. நீங்கள் எடுத்ததுதான். ஆனால், நீங்கள் பார்ப்பது நீங்கள் எடுத்ததில்லை. ரொம்ப குழப்பமாக இருக்கிறதோ ? ஆனால், உண்மை. 

ஆனால், RAW அப்படியில்லை. நீங்கள் பார்ப்பதை பார்த்தது போல அப்படியே பதிவு செய்யும். இது டிஜிட்டல் வகையிலான நெகட்டிவ். அதை வைத்து நீங்கள் ஏகப்பட்ட மேஜிக் செய்யலாம். ஆனால், அதை அப்படியே எடுத்துச் சென்று பிரிண்ட பண்ண முடியாது. அதை JPEG காகவோ அல்லது  PDF ஆகவோ அல்லது TIFF ஆகவோ கன்வர்ட் பண்ணி விட்டுத்தான் பிரிண்ட் பண்ண முடியும்.

சரி… RAW வுக்கு என்ன விரிவு (Expansion) ? RAWவுக்கு விரிவு என்று ஒன்றும் கிடையாது.  RAW என்றால் “ ரா” தான். 

RAW – வால் என்னென்ன சாதகங்கள் & என்னென்ன பாதகங்கள் ? 

சாதகங்கள் (பயன்கள்) என்று பார்த்தால் நிறைய…

  1. இது டிஜிட்டல் நெகட்டிவ் என்பதால், ஒரு RAW படத்தை வைத்துக் கொண்டு நீங்கள் ஏராளமான ஹை ரிசல்யூஷன் படத்தை உற்பத்தி பண்ணிக் கொண்டேயிருக்கலாம். இதன் எண்ணிக்கைக்கு முடிவேயில்லை. 
  • ஃபோட்டோஷாப்பில், ACR ( Adobe Camera RAW ) என்று ஒரு டூல் உள்ளது. நீங்கள் RAW ஃபைலை ஃபோட்டோஷாப்பில் ஓப்பன் பண்ணினால், இதுதான் முதலில் ஓப்பன் ஆகும். நீங்கள் செய்ய நினைக்கும் டச் அப் வேலையில் கிட்டத்தட்ட 75% வேலையை இந்த ஒரு டூலிலேயே முடித்து விடலாம். 
  • இந்த டூலில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் படத்தை நீங்கள் முதலில் எடுத்தது போல பழைய நிலைக்கே கொண்டு போக முடியும். அதனால், நீங்கள் ஏதேனும் தவறே செய்ய நேர்ந்தாலும், பிரச்சினையே இல்லை. 
  • நாளைக்கு நீங்கள் NG, BBC, Canon, Dicovery, Sony, TPY என்று ஏதேனும் பெரிய அளவில் போட்டியில் கலந்து கொள்ளும்போது, கடைசி ரவுண்டில் நீங்கள் எடுத்த RAW படத்தை சப்மிட் பண்ண வேண்டும் என்பது விதி. அப்போது நீங்கள், என்னிடம் “ ரா” படம் இல்லையென்று சொன்னால் , நீங்களேசுடாமல் யாருடைய படத்தையோ சுட்டு விட்டீர்கள் என்று நினைத்து உங்களை எலிமினேட் ரவுண்டில் சேர்த்து விடுவார்கள் . சன் டி.வியில் வருவது போல நாமும் கண்களைக் கசக்கிக் கொண்டே வர வேண்டியதுதான். தேவையா ? 
  • ஒரே ஒரு “ ரா” படத்தை வைத்துக் கொண்டு ப்ளாக் & வொயிட், செப்பியா, என்று விதம் விதமாக விளையாடலாம் – எல்லாம் ஹை ரிசல்யூஷனில்.  Jpeg – இல் ஒரு லெவலுக்கு மேல் போக முடியாது. 

பாதகம் என்று பார்த்தால் ஒரே ஒரு விஷயம்தான். 

கன்னா பின்னாவென்று உங்கள் மெமரி கார்டை சாப்பிடும் . உங்களுக்கு மெமாரி கார்டைப் பற்றிக் கவலையில்லையென்றால் “ ரா” தான் மிகச் சிறந்த வழி. 

இன்றுள்ள பெரும்பாலான கேமராக்களில் “ ரா” –  ஜே பெக் என்று இரண்டு ஃபார்மாட்களிலும் எடுக்கும் வசதி உள்ளது. 

நான் எல்லாப் படங்களையும் இரண்டு ஃபார்மாட்களிலும்தான் எடுப்பேன்

 “ ரா” வை அதிகபட்ச (ஹை)  ரிசொல்யூஷனிலும் ( என்னுடடைய கேமராக்களில் மூன்று வகை “ ரா” உள்ளன. ஹை, மீடியம், லோ) ,ஜேபெக்கை மிகவும் குறைந்த ரிசொல்யூஷனிலும் வைத்துக் கொள்வேன். 

ஹை “ ரா “ – எடிட்டிங்கிற்காக. 

 லோ ஜேபெக் – துரிதமாக பார்த்து அந்தப் படம் ஒகேவா இல்லையா என்று முடிவு செய்து “ ரா” வையும் சேர்த்து டெலிட் செய்வதற்காக.  

நான் எப்போதுமே நிறைய மெமரி கார்டுகளை கைவசம் வைத்திருப்பதால், ஃபைலின் சைஸ் பற்றிக் கவலைப் படுவதில்லை. 

நான் ““ரா””வுக்கு எப்பவோ மாறிட்டேன்.  அப்போ நீங்க ? 

பிரியமுடன் பாலா.