HDR Photos எடுப்பது எப்படி ? 

முதலில் HDR என்றால் என்ன என்று பார்ப்போம்.

HDR – High Dynamic Range 

ஒளியின் இருவேறு பக்கங்களையும் ( Shadows & Highlights ) 

ஒன்றிணைத்து பளீரென்று எல்லாவற்றையும் ஒரே லைட்டிங் கண்டிஷனில் காண்பிப்பதே HDR.

சரி…இதை எப்போது எடுப்பது ? எப்படி எடுப்பது ?

எப்போதெல்லாம் இரண்டு வகை லைட்டிங் கண்டிஷன்  இருக்கிறதோ , எப்போதெல்லாம் ரொம்ப ரொம்ப டீடெய்ல்ஸ் காண்பிக்க நினைக்கிறீர்களோ, எப்போதெல்லாம் ஒரு படத்தை ரொம்ப வித்தியாசமான முறையில் காண்பிக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் HDR படங்கள் எடுக்கலாம். 

மொபைலில் இருக்கும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் தவிர்த்து, மொத்தம் மூன்று வகைகளில் HDR  படங்கள் எடுக்கலாம். மூன்றையும் விளக்குகிறேன். உங்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அதில் எடுக்கத் தொடங்குங்கள். 

  1. கேமராவை ஸ்பாட் மீட்டரிங்கில் வைத்து , வெளிச்சத்தில் ஒருரீடிங்கும், நிழலில் ஒரு ரீடிங்கும் எடுத்துக் கொண்டு, இதற்கு இடைப்பட்ட ஒரு ஆவரேஜ் செட்டிங்ஸில், கேமராவை மேனுவல் மோடில் வைத்து ஓரிரு ட்ரையல் ஷாட்ஸ் எடுத்துப் பாருங்கள். அதில் உங்களுக்குப் பிடித்த ஷாட்டில் உள்ள ரீடிங்கை செலக்ட் செய்து கொள்ளுங்கள். கேமராவை நல்ல ஒரு ட்ரைப்பாடில் செட் பண்ணி விட்டு கரெக்ட் எக்ஸ்போஷரில் ஒரு ஷாட்டும், அண்டர் ஏக்ஸ்போஷரில் ஒரு ஷாட்டும் ஓவர் எக்ஸ்போஷரில் ஒரு ஷாட்டும் என்று குறைந்தது 3 படங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். 

எடுத்த படங்களை ஏதேனும்HDRசாஃப்ட்வேரிலோ ( நிறைய சாஃப்ட்வேர் இப்போது ஃபிரீயாகவே கிடைக்கிறது. கொஞ்சம் முயற்சி செய்து தேட வேண்டும்) அல்லது ஃபோட்டோ ஷாப்பிலோ அப்லோட் செய்து ஃபோட்டோ மெர்ஜ் செய்தால் , சுவையும் மணமுமிக்கHDRபடம் ரெடி.

சரி….கேள்வி நம்பர் 1. எவ்வளவு ஸ்டாப் அண்டர் எக்ஸ்போஷர் எவ்வளவு ஸ்டாப் ஓவர் எக்ஸ்போஷர் என்று எப்படி தீர்மாணிப்பது ? 

அது உங்கள் ஃபிரேமில் உள்ள இருட்டையும் வெளிச்சத்தையும் பொறுத்தது.  

சரி…கேள்வி நம்பர் 2….அண்டர் எக்ஸ்போஷர் , ஓவர் எக்ஸ்போஷர் எப்படி செட் பண்ணுவது. 

இதற்கும் மூன்று வழிமுறைகள் உள்ளன. ஒன்று, அப்பெர்ச்சரைக் கூட்டலாம் அல்லது குறைக்கலாம். 

ஷட்டர் ஸ்பீடைக் கூட்டலாம் அல்லது குறைக்கலாம். 

எக்ஸ்போஷர் வேல்யூ காம்பென்சேஷனைக் கூட்டலாம் அல்லது குறைக்கலாம் ( Ev +/- ) .

திரும்பவும் சொல்கிறேன், 3 படங்கள் என்பது குறைந்த பட்சம். அதிகபட்சம் நீங்கள் எவ்வளவு வேண்டுமானலும் எடுக்கலாம்.

நான் கீழே உள்ள HDRபடத்தில் மொத்தம் 7 படங்களை மெர்ஜ் பண்ணியிருக்கிறேன். ( Manual Mode | 0.3 Sec | f 8 | ISO 100 | -1, -2/3, -1/3 , 0, +1/3,+ 2/3  & +1 ). On Heavy Tripod with Heavy Stones hooked up at the bottom. ஒவ்வொரு படத்தையும் நிறுத்தி நிதானமாக, மிர்ரர் லாக் பண்ணி விட்டு, 2 வினாடி செல்ஃப் டைமரில் போட்டு எடுத்தேன். இப்படி செய்தால் எந்த வித ஷேக்கும் இல்லாமல் படம் அமர்க்களமாக வரும் . நான் உபயோகித்த சாஃப்ட் வேர் ஃபோட்டோமாட்டிக்ஸ் ( 40 டாலர் கட்டணம்). இதே போல் நிறைய படங்களை ஃபோட்டோஷாப்பிலும் மெர்ஜ் பண்ணியிருக்கிறேன்

  • இரண்டாவது வழி முறை : RAW வில் எடுத்த ஒரே ஒரு படத்தை வைத்து அண்டர் எங்க்ஸ்போஷர், ஓவர் எக்ஸ்போஷர் என்று நிறைய படங்களை JPEG இல் உருவாக்கிக் கொண்டு அவற்றை மேலே சொன்ன முறையில் மெர்ஜ் பண்ணுவது. இதிலும் ரிசல்ட் நன்றாக வரும் ஆனால், ஷாட் கட். இதில் நீங்கள் பெரிதாக ஒன்றும் கற்றுக் கொள்ள முடியாது. Noise – ம் நிறைய வரும்.
  • Single Shot HDR – இதுதான் உள்ளதிலேயே ரொம்பப் பெரிய ஷாட் கட். 

நிறைய சாஃப்ட்வேர்கள் இந்த வசதியைத் தருகின்றன. ஒரே ஒரு JPEG படத்தை அப்லோட் செய்தீர்களென்றால், அதுவே, அண்டர் எக்ஸ்போஷர் , ஓவர் எக்ஸ்போஷர் ஷாட்ஸ் எல்லாம் க்ரியேட் பண்ணி, ஒரு HDR படத்தைக் கொடுத்து விடும். Noise ம் கண்னா பின்னாவென்று வரும். நான் இரண்டாம் ஆப்ஷனில் சொன்னது போலவே இதிலும் நீங்கள் பெரிதாக ஒன்றும் கற்றுக் கொள்ள முடியாது. 

நான் எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்லி விட்டேன். உங்களுக்கு முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டுமா அல்லது ஷாட் கட்டே போதுமாவென்று நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

ஆனால், முயற்சி செய்யத் தொடங்குங்கள். சரியா ?

பிரியமுடன் 

பாலா….