இன்று காலை, நமது நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு காமெண்ட். “அதுதான்  எடிட்டிங் சாஃப்ட்வேர் இருக்கிறதே. இன்னும் ஏன் ஃபில்ட்டரைக் கட்டிக் கொண்டு அழுகிறாய் ராசா ? “ என்று.  கரீக்ட்டு.

ஆனால், இன்று எடிட்டிங் டெக்னாலஜி உலகத்தில், நீங்கள் புகைப்படமே எடுக்காமல் உங்களால் மிகச்சிறந்த புகைப்படங்களை வழங்க முடியும். ஒத்துக் கொள்கிறீர்களா ? நீங்கள் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ஏனென்றால், அதுதான் உண்மை.

பிறகு நாம் ஏன் மண்டையைப் போட்டு உடைத்து புகைப்படக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் ?

சில வருடங்களுக்கு முன்னால் எங்கள் குடும்பத்துடன் ஸ்விட்சர்லாந்த் நாட்டிற்கு சென்றிருந்தோம். வந்தவுடன் சில படங்களை என் அண்ணன் பையனுக்கு அனுப்பியிருந்தேன். அந்த உத்தமன், என் படங்கள் அனைத்தையும் எடிட் செய்து எல்லா ஃபோட்டோக்களிலும் அவனும் இருப்பது போல் செய்து ஃபேஸ் புக்கில் போட்டு விட்டான். ஒரே பாராட்டு மழை. “ மச்சி…எப்படா ஸ்விட்சர்லாந்த் போன ? ஃபோட்டோஸ் எல்லாம் சூப்பர்டா நண்பா ““ என்று கன்னா பின்னாவென்று காமெண்ட்ஸ். எனக்கு நிஜமாலுமே கண்ணை கட்டி விட்டது. 

அவனும் ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறாற்போல் ஃபோட்டோஸ் ரெடி. ஆனால், எனக்கு கிடைத்திருக்கும் பயண அனுபவம் அவனுக்குக் கிடைத்திருக்குமா ? 

அதுதான், உங்களுக்கு பதில். புகைப்படம் எடுப்பது என்பது வேறு. எடிட்டிங் என்பது வேறு. குழப்பைக் கொள்ளாதீர்கள். சில விஷயங்களை ஒரிஜினலாகக் கொண்டு வருவது கடினம். அப்படியே கொண்டு வந்தாலும், அதில் நீங்கள் பெருமைப் பட்டுக் கொள்ளும் அளவிற்கு சாதனை ஒன்றும் கிடையாது. By the way, என்னுடைய ஸ்விட்சர்லாந்த் அனுபவம் பற்றி டைரி ஒன்று எழுதியுள்ளேன். படிக்க விருப்பம் உள்ளவர்கள், எனக்கு இன்பாக்ஸில் மெசேஜ் அனுப்பங்கள். லிங்க் ஷேர் செய்கிறேன்.

சரி …மேட்டருக்கு வருவோம்…

ஃபில்ட்டர்களில் ஊருப்பட்ட ஃபில்ட்டர்கள் உள்ளன. அதில் சில அனைவருமே ஒத்துக்கொள்ளக் கூடிய ஃபில்ட்டர்கள். நேஷனல் ஜியாக்ரஃபி, பிபிசி, கேனான் போன்ற பெருந்தலைகள் நடத்தும் புகைப்படப் போட்டிகளில் நான் சொல்லும் அனைத்து ஃபில்டர்களுமே Accepted & Allowed. 

  1. Ultra Violet (UV) Filter…

Ultra Violet என்று சொல்லப்படும், சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் லென்ஸில் உள்ள கெமிக்கல் கோட்டிங்கை ரொம்பவே டேமேஜ் பண்ணி விடும். கென்யா, பூமத்திய ரேகைக் கோட்டில் இருப்பதால், இங்கு புற ஊதாக் கதிர்களின் பாதிப்பு ரொம்பவே அதிகம். 

அது இல்லாமல், லென்ஸில் வரக்கூடிய ஸ்க்ராட்ச் போன்ற ஃபிசிக்கல் டேமேஜிலிருந்தும் இந்த UV Filter உங்கள் லென்ஸை பாதுகாக்கும். நான் இந்தப் படத்தை ( தண்ணீர் + பறவை) எடுக்கும்போது, ஒரு பாறைக்குள் கோக்கு மாக்காக என்னுடைய ட்ரைப்பாடை செட் பண்ணியிருந்தேன். நான் அந்தப் பக்கம் திரும்புகையில் , ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ட்ரைப்பாட் சரிந்து விழுந்து ‘சலீர்’ என்று ஒரு சத்தம். இன்று லென்சுக்கு சங்குதான் என்று முடிவு பண்ணி விட்டேன். பார்த்தால், என்னுடைய ஃபில்ட்டர் மட்டுமே உடைந்திருந்தது. லென்சுக்கு ஒன்றும் ஆகவில்லை. டேமேஜ், 2000 ரூபாயுடன் போய் விட்டது ( 200 ரூபாய்க்கும் ஃபில்ட்டர்கள் உள்ளன. கொஞ்சம் காஸ்ட்லியாகப் போனால் குவாலிட்டி நன்றாக இருக்கும் ). எனவே, என்னுடைய எல்லா லென்ஸிலும் ஒரு UV Filter கண்டிப்பாக இருக்கும். 

  • Polarizer

இது Landscape Photography – யில் மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த ஃபில்ட்டரினால் இரண்டு உபயோகங்கள்

ஒன்று : தேவையில்லாத Light Reflections ஐ தவிர்க்க முடியும். சில சமயம் தண்ணீரில், கண்ணாடி சர்ஃபேஸில், பனியில் ( Snow) நான் சொல்லும் Light Reflections வரும். அப்போது இந்த ஃபில்ட்டரை மாட்டிக் கொண்டு எடுத்தால், படம் மிக அழகாக வரும்.

இரண்டு : வானத்தில் தெரியும் ஊதாக் கலரையும், மரம் , புல்வெளிகளில் தெரியும் பச்சைக் கலரையும் தூக்கிக் கொடுக்கும் ( இதையும் எடிட்டிங்கில் செய்ய முடியும் என்று சொல்லாதீங்க மக்கா. எல்லாத்தையுமே எடிட்டிங்கில் செய்ய முடியும்). இது வைத்து எடுத்த புகைப்படத்தையும் போட்டுள்ளேன்

  • Neutral Density (ND) Filters & Graduated Neutral Density (Grad) Filters

ND Filters…..இது ஃபிரேமில் முழுவதுமாக வரும் லைட்டைக் குறைக்கும். இதை பெரும்பாலும், நீரின் ஓட்டத்தை லேசான சில்க் எஃபெக்ட்டில் எடுக்க பயன்படுத்துவார்கள். இது இல்லாவிட்டால், அதிகப் படியான வெளிச்சத்தின் காரணமாக, தண்ணீர் ஸ்டில்லாக வரும். சில்க் எஃபெக்ட்டில் எடுக்க, ஸ்லோ ஸ்பீட் மிகவும் முக்கியம். லைட்டைக் குறைக்காமல்,  ஸ்பீடை எப்படிக் குறைக்க முடியும். இதில், டார்க், டார்க்கர், டார்க்கஸ்ட் என்று நிறைய எண்கள் உண்டு. உங்களுக்குத் தேவையானதை உபயோகிக்க வேண்டியது உங்கள் வேலை. 

Graduated Neutral Density (Grad) Filters…இது …மேல் பக்கம் டார்க்காகவும் மீதி சாதாரண கண்ணாடி போலவும் இருக்கும்.

இதை இரண்டு வித்தியாசமான லைட்டிங் கண்டிஷன் இருக்கும்போது உபயோகிப்பார்கள். உதாரணமாக சூரியன் மறையும்போது வானம் ப்ரைட்டாக இருக்கும். ஆனால், உங்கள் Landscape டார்க்காக இருக்கும். அப்போது இந்த Grad Filter ஐப் போட்டு எடுத்தால் லைட்டிங் பேலன்ஸாகி, படம் ஒரே லைட்டிங்கில் எடுத்தது போலத் தெரியும் . நான் இது அதிகமாக யூஸ் பண்னுவேன். 

இதிலும் நிறைய நம்பர்கள் உள்ளன.  லைட்டிங்கின் Intensity யைப் பொறுத்து சரியான ஃபில்லடரைத் தேர்வு செய்வது உங்கள் திறமை. 

இதில் கலர் ஃபில்ல்டர்களும் உண்டு. நமது தமிழ், தெலுங்குப் படங்களில் இதை யூஸ் பண்ணி பயமுறுத்துவார்கள்….

“ கேமரா பொய் சொல்லாது. ஆனால், கேமரா மூலமாக பொய் சொல்ல முடியும்” என்று ஒரு ரஷ்ய பழமொழி உண்டு.

உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்…..

பிரியமுடன்

பாலா…