Bird Photography  யில்  Diagonal Shots ரொம்பவே வித்தியாசமும், சுவாரசியமும் நிறைந்தது. 

Diagonal shots க்குDutch Angle,  Canted Angle, Dutch Tilt & Oblique Angle என்று நிறைய பெயர்கள் உண்டு. இந்த டெக்னிக்கை முதன் முதலில் ஒரு  Dutch Photographer தான் முயற்சி செய்து பாப்புலராக்கினார். அதனால்தான் டட்ச் ஆங்கிள் என்று பெயர் வந்தது. 

பார்ப்பதற்கு ரொம்ப  சிம்பிள் போலத் தெரிந்தாலும் , இதில் சில பிராக்டிகல் சிக்கல்கள் உள்ளன. 

ஆரம்பத்தில் , சும்மா கேராவை 45 டிகிரி திருப்பி வைத்து எடுத்து விட்டு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறதே  என்று மக்கள் கொண்டாடினார்கள்.

இது போன்ற Diagonal Shots –ஐ  சில பழைய தமிழ்ப் படங்களிலும் பார்க்கலாம்.

இது என்ன ரொம்பச் சின்னப் புள்ளத்தனமா இருக்கு, என்று பின்னால் வந்த புகைப்படக் கலைஞர்கள் , புகைப்படத்தின் குறுக்கே நிஜமாகவே ஏதாவது ஒரு Object வந்து படத்தை சமமாகப் பிரித்தால் மட்டுமே அது Diagonal Shot என்று கருதப்படும்  என பேச ஆரம்பிக்க, அப்போது ஆரம்பித்தது நிஜமான விளையாட்டு. மக்கள் பின்னிப் பெடலெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். 

நான் பொடியனாக இருக்கும்போது இதில் ஒரு பெரிய பத்திரிக்கை பெரிய போட்டி ஒன்றையே நடத்தியது நினைவிற்கு வருகிறது . National Geography என்று ஞாபகம். மக்களும் பட்டையைக் கெளப்ப ஆரம்பித்து விட்டார்கள்.

பின்னால், எடிட்டிங் பாப்புலராக ஆரம்பித்ததும், நார்மலாக ஒரு புகைப்படத்தை எடுத்து விட்டு , அதை ஒரு 45 டிகிரி ரொட்டேட் பண்ணி விட்டு, “ எப்பூடி ?” என்று மக்கள் ரவுசு விட ஆரம்பித்தது, ஒரு அழுகுணி ஆட்டம்.   

சரி…எப்படித்தான் எடுப்பது ? வழக்கம்போல், பொறுமையாக அது போல ஒரு ஃபிரேம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். உங்களுடைய Comfort Zone – இல் இருந்து கொஞ்சம் வெளியில் வந்து கொஞ்சூண்டு கஷ்டப்பட்டீர்களென்றால், இது ஒன்றும் கம்ப சூத்திரமில்லை…

இது Bird Photography இல் மட்டுமல்ல Landscape, Abstract என்று எல்லா ஃபீல்டிலேயும் ட்ரைப் பண்ணலாம். நான் முன்பே சொன்னது போல, எல்லாமே “மாத்தி யோசி” டெக்னிக்தான்…

அப்புறம் என்ன ……உங்க கேமராவை எடுத்து ஷூட்ட ஆரம்பிங்க…

இனி இந்தப் புகைப்படம் பற்றி….

ID : Pygmy Falcon

Place : Serengetti, Tanzania 

Camera : Canon 1DX Mark II 

Lens : Canon 100- 400 MM f4 IS 2 L Series – with 1.4X  III – Tele Converter

ISO : 200 

Mode : Aperture Priority – f8 ( It was actually f5.6 only. Because of TC, you will loose one f stop. So, it was automatically jumped to f8 ) – Speed : 1/250 Sec

White Balance : 5500 K ( Daylight )

Metering : Centre Weighted Average Metering  

Hand held….

சரி……நாளை பார்ப்போமா ?

பிரியமுடன்…

பாலா….