“ Out of the box thinking” என்று சொல்லப்படும் “ மாத்தி யோசி” சிந்தனை ஃபோட்டோகிராஃபிக்கு ரொம்பவே முக்கியம்.
நான் கீழே போஸ்ட் பண்ணியுள்ள புகைப்படத்தை பொதுவாக மற்றவர்கள் எப்படி எடுப்பார்கள் என்பதற்கு ஒரிரு சாம்பிள் படத்தையும் கீழே கமெண்டில் போடுகிறேன்.
இன்று தோராயமாக ஒரு நாளைக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான புகைப்படங்கள் வெவ்வேறு இணையதளங்கள் மூலமாக ஒரு நாளில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது.
அந்தக் கூட்டத்தில் உங்களுடைய புகைப்படம் தனியாக தெரிய வேண்டுமென்றால் “ மாத்தி யோசி “ மார்க்கம் ஒன்றேதான் வழி.
சரி…விஷயத்திற்கு வருவோம். நான் இந்தப் படத்தை எடுக்கும்போது, என்னுடன் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு ஐந்து நிமிடத்திற்குள் பொதுவாக எல்லோரும் எடுக்கும் ஃபிரேமை நாலைந்து எடுத்து விட்டு, கிளம்புவோமா என்றார்கள். நான் இன்னும் ஆரம்பிக்கவேயில்லை என்றேன். கடுப்பாகி விட்டார்கள்.
கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அந்த இடத்தை விட்டு நகலவேயில்லை. திடீரென்று இந்த (ஜல்லிக்கட்டு) கொம்பு ஐடியா வந்தது. அதுவும், இந்த காட்டெருமை, என்னைப்பார்த்து விட்ட “லுக்கு” இன்னும் என்னால் மறக்க முடியாது. சில ஷாட்ஸ் எடுத்ததும், எனக்கு மிகவும் திருப்தி. என்னுடன் இருந்த நண்பர்கள் நான் என்ன செய்கிறேன் என்பதில் ஆர்வம் எதுவும் காட்டவில்லை. ஹோட்டலுக்கு வந்த பிறகு, இந்த ஃபிரேமைக் காண்பித்தேன். வெறுத்து விட்டார்கள்.
சரி….இன்னொரு விஷயம்….
Exif Data ……இதைக் கேட்பதும் தவறில்லை. அதைக் கொடுப்பதும் தவறில்லை. ஆனால், அதில் ஒரு ஆபத்து இருக்கிறது. எந்த செட்டிங் வைத்தால் ஃபோட்டோ இப்படி வரும் என்று வேண்டுமானலும் தெரிந்து கொள்ளலாம். ஆனால், அதே செட்டிங்கில் நீங்கள் எடுக்க முயற்சித்தால்தான் பிரச்சினை.
காரணம், லைட்டிங் கண்டிஷன் நொடிக்கு நொடி மாறுபடும். அதே ஃபோட்டோகிராஃபரால் கூட திரும்ப அதே இடத்திற்கு சென்று அதே காட்சியை அதே செட்டிங்கில் எடுத்தால் கண்டிப்பாக அதே ரிசல்ட் கிடைக்காது. எனவே, முடிந்த வரை, யாரிடமும் EXIF டீடெய்ல்ஸ் கேட்பதைத் தவிருங்கள். Night Photography போன்ற ஸ்பெஷல் ஃபோட்டோகிராஃபி, இதற்கு விதி விலக்கு. நான் யார் கேட்டாலும் சொல்லி விடுவேன். இல்லாவிட்டால், “ நாம் ரொம்ப அலட்டுகிறோம் “ என்று சொல்லி விடுவார்கள்…
சரி …எதற்கு வம்பு……இந்தப் புகைப்படத்தின் EXIF Details…
Camera : Canon 7D Mark II
Lens : Canon 100- 400 f4- IS 2 L Series Lens
ISO: 200
Aperture Mode : f8
Metering : Evaluate Metering
Ev : – 1/3
பிரியமுடன்
பாலா