Bird Photography – யில்Composition என்றழைக்கப்படும் Framingம் ரொம்ப முக்கியம். புகைப்படத்தின் அழகிற்கு இதன் பங்களிப்பு 50% க்கும் மேல்.
உங்களில் எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. நான் பொதுவாக Technical விஷயங்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், அது பற்றி முழுவதுமாகத் தெரிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம்.
என்னுடைய முழுக் கவனமும் Compositionஇல் தான் இருக்கும். இதற்காக நான் ரொம்பவுமே மெனெக்கெடுவேன். காரை இந்தப் பக்கம் திருப்பி, அந்தப் பக்கம் திருப்பி, ஒரு நல்ல பொசிஷனுக்காகக் காத்திருந்து, அதற்காகக் கூட வரும் மக்களிடம் திட்டு வாங்கி…..என்னைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு புகைப்பட ஷூட்டிங்குமே ஒரு பிரசவ அனுபவம்தான்.
அதே போல், முடிந்த வரையில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரினங்களை ஒரே ஃபிரேமில் கொண்டு வர முயற்சிப்பேன். இது எப்பொழுதும் சாத்தியமில்லை. இதற்கு அதிர்ஷ்டமும் அவசியம். அப்படிக் கூடி வந்து விட்டால், அந்தப் படம் அட்டகாசமாக வந்து விடும் என்பதற்கு இந்தப் படமே சிறந்த உதாரணம். ஆம், Wild Life Photography யில் எந்த அளவுக்கு Hard Work அவசியமோ , அந்த அளவிற்கு அதிர்ஷ்டமும் வேண்டும்.
நான் இந்தப் படம் எடுப்பதற்கு ஒரு முப்பது நிமிடங்கள் செலவழித்திருப்பேன். முதலில் , இந்த யானைக்குட்டியைத்தான் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். அதையும், பின்னால் தெரியும் கிளிமஞ்சாரோ மலையையும் இணைத்து எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். இந்த யானைக் குட்டி, ஆடிக் கொண்டேயிருந்ததால், ஃபோகஸ் பண்ண மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், எதற்கும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் போல தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருந்தேன் ( Hard Work ).
அப்போதுதான் , இந்தப் பறவை வந்து இந்த யானைக் குட்டியின் மீது உட்கார்ந்தது – கண்ணா லட்டு திங்க ஆசையா என்று. ( அதிர்ஷ்டம் ). என்னுடைய நேரத்திற்கு, இந்த யானைக் குட்டியும் ஆடுவதைக் கொஞ்ச நேரத்திற்கு ஒத்தி வைத்தது ( கண்னா மறுபடியும் லட்டு திங்க ஆசையா ).
உடனே, தட தடவென்று க்ளிக்க ஆரம்பித்தே….பொதுவாக இந்த அம்போஸலி நேஷனல் பார்க், மிகவும் வறட்சியாக் இருக்கும். என்னுடைய அதிர்ஷ்டத்திற்கு , சமீபத்தில் பெய்திருந்த மழையால், அன்று பச்சை பசேலென்று இருந்தது…
சரி……இனி இந்தப் படம் பற்றி
Place : Amboseli National Park, Kenya
Bird : Cattle Egret
Camera : Canon 5D Mark III
Lens : 24- 105 MM f4 Kit Lens
Mode : Aperture Mode
ISO : 200
Aperture : f10 ( Speed 1/250 ). I put it in f10 as I wanted a very good depth of field in order to get the Mountain also in good focus
Metering : Evaluate
பிரியமுடன்
பாலா….