சமையலுக்குத் தேவையான பொருட்கள்…..சாரி…பழக்க தோஷம்…

Bird Photography க்குத் தேவையான முக்கியமான விஷயங்கள்….

கொஞ்சம் டப்பு


நெர்ர்ர்ர்ர்றைய பொறுமை 


நிதானம்….


நாலைந்து மணி நேரம் அலைந்த பிறகும் ஒரு பறவையும் ( நான் நெஜ பறவையைச் சொல்கிறேன்) சிக்கா விட்டால், There is always tomorrow என்று மனதைத் தேற்றிக் கொள்ளும் மனப் பக்குவம்…


ஒரு நல்ல கேமரா


300 மிமீ அல்லது அதற்கும் பெரிய லென்ஸ் ( நம்ம ராதிகா ராமசாமி அல்லது நம்ம திருப்பூர் கிருஷ்ணமூர்த்தி போல எடுக்க வேண்டும் என்றால் 600 மிமீ லென்ஸ்) + 1.4X Tele Converter 
ஒரு மோனோப்பாட் 

“கிட்டத்தட்ட” அவ்வளவுதான் 

என்னடா கேமராவையும் லென்ஸையும் கடைசியாகச் சொல்கிறானே என்று பார்க்கிறீர்களா ? உண்மைதான். முதலில் சொன்ன நாலு விஷயங்கள் கேமராவையும் லென்ஸையும் விட முக்கியம்…

Bird Photography இல் நிறைய உப தலைப்புகள் உள்ளன. பறவையை உட்கார்திருக்கும் நிலையில் எடுப்பது, பறக்க எத்தனிக்கும்போது எடுப்பது , பறக்கும்போது எடுப்பது, ஏதாவது ஒரு ஆக்ஷன் செய்யும் போது எடுப்பது, கொஞ்சும் போது எடுப்பது, கலவியலில் ஈடுபடும்போது எடுப்பது, ஏதாவது ஒருஃபன்னி போஸ் கொடுக்கும்போது எடுப்பது…..இது போல இன்னும் நிறைய ….

இதில் ஒவ்வொரு சப்ஜெக்ட்டுக்கும் ஏற்றாற்போல் செட்டிங் வேறு படும்…

இன்னும் 15 நாட்களுக்கு இது பற்றித்தான் பேசப் போகிறோம்…எனவே ..இன்று இது போதும்..

நாளை சந்திப்போமா ?

பிரியமுடன் 

பாலா.