நான் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்தவுடன் எனக்கு நிறைய மெசேஜ்கள்- இன்பாக்சில்.
அதில், பெரும்பாலும் இரண்டே கேள்விகள்தான் பிரதானமாக இருக்கின்றன.
ஒன்று. ….நாம் அருகில் சென்றவுடனேயே அவை பறந்து விடுகின்றதே. அப்புறம் எப்படி எடுப்பதாம் ?
இரண்டு….எதுங்ணா நல்ல கேமரா & நல்ல லென்ஸ் ?
ஓவ்வொன்றாய்ப் பார்ப்போம்.
முதல் கேள்விக்குப் பதில்….நான் முதன் முதலில் சொன்ன “மகாப்” பொறுமை.
நான் என்ன செய்வேன் என்று சொல்கிறேன். முடிந்தால் ஃபாலோ பண்ணுங்கள். இல்லாவிட்டால் வேறு எளிதான வழியேதேனும் கண்டு பிடியுங்கள்.
பறவை (கள்) அதிகம் நடமாடும் இடத்தைக் கண்டு பிடிப்பேன். பிறகு, அதற்குப் பக்கத்தில் ட்ரைப்பாடில் கேமராவை செட் பண்ணி விட்டு , விலகி விடுவேன். ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் பறவை (கள்) நம் கேமராவிற்குப் பழகி விடும். பிறகு மெதுவாக சென்று கேமரா பக்கத்தில் நின்று அவற்றின் செய்கைகளை ரசிப்பேன். கொஞ்ச நேரத்தில், நம்மால் அவற்றிற்கு ஆபத்து ஏதுமில்லை என்று புரிந்து கொள்ளும். அதற்கு முன்னாலேயே நான் ISO ( 200 – 400), Aperture ( f4 or f5.6 or f8 ), Metering ( Spot or Centre Weighted Average ), Ev Compensation எல்லாம் செட் பண்ணி விடுவேன்…கேமராவில் Silent Mode ஐயும் ஆன் பண்ணி விடுவேன். இல்லாவிட்டால், கேமரா போடும் சத்தத்திற்கு ஒரு பறவையும் கிட்டவே அண்டாது.
மெதுவாக க்ளிக்க ஆரம்பித்து விடுவேன். நான் இதில் பதிந்திருக்கும் புகைப்படங்களை எடுக்க 3 மணி நேரம் செலவிட்டேன்.
கொத்தான பறவைகளை பெரும்பாலும் படகில் வைத்துத்தான் எடுப்பேன். ஒரு பெரிய பறவை கும்பலைப் பார்த்தவுடன், படகை நிறுத்தி விடுவேன். அவற்றை தொந்தரவு செய்வதற்கென்றே ஏதாவது ஒரு ஏழரை கண்டிப்பாக வரும். உடனே அவை சல்லென்று பறக்கத் தொடங்கும். உடனே க்ளிக்க ஆரம்பித்து விடுவேன். அப்போது என்னுடைய சாய்ஸ் Shutter Priority தான். என்னுடைய லென்ஸின் ஃபோக்கல் லென்த்தைப் பொறுத்து ஸ்பீடை ஃபிக்ஸ் பண்ணுவேன் ( லென்ஸ் 400 என்றால், ஸ்பீட் 1/400 அல்லது அதற்கும் மேல்). இது படம் ஷேக் ஆகாமல் இருக்க உதவும். Image Stabilizer ஐ ஆன் பண்ணுவது அவசியம்.
காரில் செல்வதாக இருந்தாலும் இதே டெக்னிக் தான். கார் எஞ்சினை ஆஃப் பண்ணி விட்டு சிறிது நேரம் காத்திருந்தால் பறவைகள் உங்களுக்கு நன்றாக போஸ் கொடுக்கத் தொடங்கி விடும்.
சில நேரம் தரையோடு தரையாக ஊர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். நான் அப்படி நிறையப் படங்கள் எடுத்திருக்கிறேன். அடுத்த சில நாட்களில் பதிவிடுகிறேன். நான் முதன் முதலில் (Bird Photography 1 ) போட்ட படமே அப்படி எடுத்ததுதான்.
கேள்வி No. 2 ஒரு நல்ல கேமராவும் நல்ல லென்சும் சொல்லுங்ணா….
இந்தக் கேள்வி ரொம்ப ஈசியானது போலத் தெரிந்தாலும், என்னைப் பொறுத்த வரையில் இதுதான் ரொம்ப ரொம்பக் கஷ்டமான ஒன்று. காரணம்..இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் என்று ஒன்றுமேயில்லை.
காரணம்…..ஒரு கேமராவையும் Choose பண்ணுவதற்கு நிறைய அடிப்படைத் தகவல்கள் தேவை. உதாரணமாக….உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும் ? இதுதான் எல்லாவற்றிற்கும் அடிப்படையான விஷயம். அடுத்து உங்களுக்கு ஃபோட்டோகிராஃபியில் எந்த சப்ஜெக்ட் ஆர்வம். காரணம், அனைத்து சப்ஜெக்ட்டுக்கும் பெஸ்ட்டாக் இருப்பது போல ஒரு கேமராவும் கிடையாது.
அடுத்து, இதைக் கற்றுக் கொள்வதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரமும் பொறுமையும் இருக்கிறது . நிறைய பணம் போட்டு கேமரா வாங்கும் பெரும்பாலான மக்களுக்கு , கேமராவுடன் வரும் யூசர் மேனுவலைப் பொறுமையாகப் படிக்கும் பொறுமை இருப்பதில்லை.
நான் எந்தவொரு கேமரா வாங்கினாலும் குறைந்தது நாலு அல்லது ஐந்து முறை யூசர் மேனுவலைப் படித்து கிட்டத்தட்ட மனப்பாடமே பண்ணி விடுவேன். அது போக அதை என்னுடைய ஐ பேடில் சேவ் செய்து எப்போது ஷூட்டிங் சென்றாலும் கையுடனேயே வைத்திருப்பேன் . அந்த Dedication இருந்தால் மட்டுமே ஃபோட்டோகிராஃபியில் உருப்படியாக ஏதேனும் சாதிக்க முடியும். ( நீ என்ன சாதித்து விட்டாய் என்று தயவு செய்து கேட்க வேண்டாம். இன்னும் ஒரு புண்ணாக்கும் இல்லை).
இந்த மூன்று கேள்விகளை நீங்களே கேட்டுக் கொண்டு பதிலைத் தேடினீர்கள் என்றாலே போதும். உங்களுக்கென்று ஒரு பெஸ்ட் கேமரா மாட்டி விடும்.
மற்றபடி கேனான், நைக்கான், சோனி எல்லாமே நல்ல கேமராதான்.
நான் வழக்கமாக சொல்வது போல் “ காசுக்கேத்த பனியாரம்தான்”
அடுத்து வேறு சில படங்களுடன்…
பிரியமுடன்
பாலா