Bird Photography – யில் இது போல கொத்து கொத்தாய் பறவைகளை படம் படிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும்…
இதில் ஒரே சிக்கல், இந்தப் படத்தில் உள்ளது போன்ற மலையும், நீர் வளமும் நிறைந்த லொக்கேஷன்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிக்கல். அப்படியே கண்டுபிடித்தால் அந்த லொக்கேஷன் நம் வீட்டிற்கு அருகில் இருப்பது இன்னும் சிக்கல். அப்படியே இருந்து விட்டாலும், நாம் போகும் நேரம் சீசன் மாறி அவை வேறு எங்காவது போகாமல் இருக்க வேண்டும்.
அந்த வகையில் நான் ரொம்ப அதிர்ஷ்ட சாலி. எனக்கு 2-3 மணி நேர டிரைவில் Lake Naivasha, Lake Oledon, Lake Elementaita & Lake Nakuru என்று நாலு ஏரிகள் இருக்கின்றன. நாலுக்குமே மலைகள் பேக்ரவுண்ட் என்பது கூடுதல் ப்ளஸ். ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் கிளம்பினால், மாலை திரும்பி விடலாம். ஒவ்வொரு எரியிலும் , ஒரு படகோட்டியை ஃபிரெண்ட் பிடித்து வைத்துள்ளேன். கிளம்புவதற்கு முன்னால், லைட்டிங் பற்றி, பறவைகள் நிலவரம் பற்றி கேட்டுக் கொள்வேன் ( ஹோம் வொர்க் ). இது ஏமாற்றத்தைத் தவிர்க்கும் .
நான் பொதுவாக….இது போன்று கொத்தாக பறக்கும் பறவைகளை எடுக்கும்போது …..Burst Mode – ஐத் தவிர்த்து விடுவேன்.
Single shot – இல் போட்டு விட்டு , AI Servo வை ஆன் பண்ணி விடுவேன். பண்ணி விட்டு, அவை பறக்கும் திசையிலேயே கேமராவை Pan பண்ணிக் கொண்டே, ஒரு நல்ல பேக்ரவுண்டையும் ஃபிரேமுக்குள் கொண்டு வர முயற்சிப்பேன்….ரொம்ப முக்கியமான விஷயம் கேமராவில் உள்ள Image Stabilizer (IS ) ஐ ஆன் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும்.
Metering : Evaluate metering தான் பொறுத்தமானது .
ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். Multi Focus Points –ஐ ஆன் பண்ணி விடுவேன்.
Aperture Priority தான் என்னுடைய சாய்ஸ். அதிலும் f8 நல்ல Depth of Field ஐக் கொண்டு வந்து விடும்…லைட்டிங் கண்டிஷனைப் பொறுத்து சில சமயம் Grad ND filters ம் யூஸ் பண்ணுவேன்….அது டாப் போர்ஷனை கொஞ்சம் டார்க்காகிக் காட்டும். பார்க்க அழகாக இருக்கும்.
சரி….இனி இந்தப் படத்தைப் பற்றி…
Camera : Canon 7D ( My old Camera )
Lens : Canon 100- 300 f4.5 Old Version Lens ( with single IS )
Aperture Mode : f8 ( Speed : 1/320 Sec ) – ISO 200
Multi Focus Points . AI Servo ..
பிரியமுடன்
பாலா…