Flight Shots என்று சொல்லப்படும் பறக்கின்ற பறவைகளை எடுப்பதுதான் கொஞ்சம் சேலஞ்சிங்கான விஷயம். அதற்காக அது கஷ்டம் என்று அர்த்தமில்லை. கொஞ்சம் மெனக்கெட வேண்டும், நிறைய ப்ராக்டிஸ் பண்ண வேண்டும் . அவ்வளவுதான். 

அதேபோல் நன்றாக Panning செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். 

அது சரி….Panning என்றால் என்ன ? ரொம்ப சிம்பிள். 

கேமராவை கையில் எடுத்துக் கொண்டு, இருந்த இடத்தில் இருந்து கொண்டே பறவை பறக்கும் திசையில் அதை பின் தொடர்ந்து , கேமராவை Burst Mode- இல் மாற்றி தொடர்ந்து க்ளிக்கிக் கொண்டேயிருப்பது.

அப்படி செய்யும்போது, இரண்டு பிரச்சினைகளுக்கு வாய்ப்பிருக்கிறது. 

ஒன்று. உங்கள் கைகள் ஸ்டடியாக இல்லாமல் ஆடிக் கொண்டேயிருந்தால் நீங்கள் எடுக்கும் படமும் பரத நாட்டியம் ஆடி விடும். அதற்கு கேமராவில் IS ( Image Stabilizer ) என்று ஒரு ஆப்ஷன் உள்ளது . அதை ஆன் செய்து விட்டு எடுத்தால் உங்கள் கை நடுக்கத்தை ஓரளவு சரி செய்து படத்தை நல்லபடியாக கொடுக்க முடியும். ஆனால், ஓரளவுதான். அதேபோல், ஷூட்டிங் முடிந்தவுடன் IS ஐ ஆஃப் உடனே பண்ணி விட வேண்டும். இல்லாவிட்டால், பேட்டரியை சாப்பிட்டு விடும். அதே போல், ட்ரைபாட் போட்டு எடுக்கும்போது IS ஐ ஆஃப் பண்ணி விட வேண்டும். இல்லாவிட்டால், கேமரா குழம்பி விடும். படங்கள் கன்னா பின்னாவென்று வரும். 

இரண்டாவது பிரச்சினை , ஃபோகஸ். பறந்து கொண்டிருக்கும் பறவையை எப்படி முழுவடுமாக ஃபோகஸில் கொண்டு வருவது. இதற்கு கேமராவில் AI Servo என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. அதை ஆன் பண்ணி விட்டு எடுத்தால், முதலில் ஒரு இடத்தை ( பறவையின் கண்னை) ஃபோகஸ் பண்ணி விட்டு அதை தொடர்ந்து ஃபாலோ செய்தால், கேமரா ஆட்டோமேட்டிக்காக ஃபோகஸ் பண்ணிக் கொண்டே வரும். இதற்குப் பெயர் , “Auto Tracking”.  ஆனால், நார்மலாக வரும் பீப் சத்தம் இதில் வராது. பயப்பட வேண்டாம். ஃபோகஸில் ஒன்றும் பிரச்சினை வராது. 

இதிலும் ஒரு சின்ன சிக்கல் உள்ளது. ஃபோகஸ் பாயிண்டை ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் வைத்திருந்தால், ட்ராக்கிங் ஸ்பீட் கம்மியாகி விடும். நான் பொதுவாக Flight Shots எடுக்கும்போது, ஒரே ஒரு பாயிண்ட் மட்டுமே வைத்திருப்பேன். அதையும் பறவையின் கண்ணை விட்டு அகற்ற மாட்டேன்.

மீட்டரிங்… Spot அல்லது Centre Weighted Average தான் என்னுடைய சாய்ஸ். 

Mode : Shutter Priority தான் என்னுடைய சாய்ஸ். அங்கிருக்கும் வெளிச்சத்தைப் பொறுத்து 1/500 அல்லது அதற்கும் அதிகமாக செட் செய்து விட்டு க்ளிக்க ஆரம்பித்து விடுவேன். ஒரு வேளை Aவருவது)perture Priority –யில் எடுத்தால் , நம் நேரத்திற்கு ஸ்பீட் கம்மியாகி, படம் ஏகத்துக்கும் ஆட்டம் கண்டுவிடும். 

ISO – வெளிச்சத்திற்குத் தகுந்தாற்போல் 200 அல்லது 400 இல் வைத்து விடுவேன். என்னுடைய 1DX Mark II – வில் 3200 வரை எந்த ஒரு Noise ( படத்தில் புள்ளி புள்ளியாக ) ம் வராது . ஆனாலும், 400 ஐத் தாண்டுவதைத் தவிர்த்து விடுவேன்.

சில சமயம் Ev என்று போட்டிருக்கும் Exposure Value Compensation யும் பயன்படுத்துவேன். அதில் -1 என்று செட் செய்தால் வெளிச்சத்தை கொஞ்சம் குறைவாக்கும். +1 என்றால் படம் கொஞ்சம் ப்ரைட்டாக வரும்.

இன்னொரு முக்கியமான விஷயம். நம்ம கோயில் அர்ச்சகர்கள் கையில் மணியை அடித்துக் கொண்டே அழகாக தீபாராதானை காண்பிப்பது போல் , கேமராவை Pan செய்து கோண்டே, அழகான , நேரான Framing கிலும் கவனம் செலுத்த வேண்டும். இதில் கொஞ்சம் தவறு செய்தாலும் எடிட்டிங்கில் சரி செய்து கொள்ளலாம். என்ன …கொஞ்சம் பிக்ஸல்ஸ் காணாமல் போகும். கற்றுக் கொள்ளும்போது அதைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்.

பிரியமுடன்…..

பாலா…