இதை இப்படித்தான் எடுக்க வேண்டும் என்ற இலக்கணத்திற்குள் வருவது எனக்குப் பிடிக்காது. அதனால், நான் எடுக்கும் முறை சரியா, தவறா என்பது பற்றி  எனக்குத் தெரியாது. யார் சொல்லும் செட்டிங்குகளையும் மனதில் ஏற்றிக் கொள்ள மாட்டேன். நானாக நிறைய முயற்சிகள் செய்து, எக்குத்தப்பாக தவறுகள் செய்து, அவற்றிலிருந்து கற்றுக் கொள்வது என்னுடைய ஸ்டைல். எனவே, நான் சொல்லும் விஷயங்களை ஒரு General Guidance ஆக மட்டுமே எடுத்துக் கொண்டு நீங்களாக நிறைய முயற்சிகள் செய்ய முயலுங்கள். ரிசல்ட் நன்றாக வரும்போது நீங்கள் பெருமையாக காலரை (அ) சுரிதார் துப்பட்டாவைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். 

நான் நேற்று சொன்ன பொறுமைக்கு இந்தப் புகைப்படமே ஒரு சிறந்த உதாரணம். நான் இதை எடுக்க , ஒரே இடத்தில் 2 மணி நேரம் காத்திருந்தேன்- இது போல ஒரு நல்ல ஃபிரேம் கிடைக்கப் போகிறது என்று தெரியாமலேயே. இந்த ஷூட்டிங் முடியும்போது என்னுடைய கழுத்து நன்றாக சுளுக்கியிருந்தது . காரணம், நான் அந்த 2 மணி நேரமும், என் கண்களை வ்யூ ஃபைண்டரில் இருந்து எடுக்கவேயில்லை. இந்த இரண்டு பறவைகளும் விளையாடும் விளையாட்டை தொடர்ந்து எடுத்துக் கொண்டேயிருந்தேன். 

“ஏள்ளுதான் எண்ணெய்க்கு காய்கிறது. எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது ?“ என்று என் டிரைவர் நொந்திருக்க வேண்டும். 

நான் பொதுவாக, வனத்திற்குள் சென்றவுடனேயே, அங்கிருக்கும் வெளிச்சத்திற்குத் தகுந்தாற்போல ISO –  செட் பண்ணி விடுவேன். என்னுடைய ஃபேவரைட்  200 (அ) 400 தான்.

அதேபோல், Aperture Mode (அ) Shutter Speed Mode இல் தான் எடுப்பேன். மிகவும் ரேராகத்தான் Manual பக்கம் போவேன் – Bird Photography யில் மட்டும்தான் இப்படி. மற்றபடி என்னுடைய ஃபேவரைட் மோட் Manual தான்.

பிரியமுடன் 

பாலா.