ஃபோட்டோஷாப் என்றாலே ஏதோ கெட்ட வார்த்தை போல சிலர் நினைக்கின்றார்கள் . 

அது சரியா ?

ஃபோட்டோஷாப் போன்ற சாப்ஃட்வேர்களை எவ்வளவு தூரம் உபயோகிக்கலாம் ? 

நிறைய பேர் ஃபோட்டோஷாப்பை மிஸ்யூஸ் பண்ணி நிறைய தகிடுதத்தம் பண்ணியதால், சிலர் உண்மையிலேயே கஷ்டப்பட்டு ஒரு நல்ல படத்தை எடுத்திருந்தாலும் கூட, அதைப்பார்த்து , “ இது நிஜ ஷாட்டா இல்லை ஃபோட்டோஷாப் பண்ணியதா” என்று சந்தேகப்படும் நிலை சரியா ( என்னுடைய படங்களில் நிறைய அந்த வகை விமர்சனங்களைச் சந்தித்திருக்கின்றன. By the way, எனக்கு எடிட்டிங் அவ்வளவாகத் தெரியாது. பேஸிக் மட்டுமே பரிட்சயம்)? 

இது நிறையப் பேருக்குத் தோன்றும் சந்தேகங்கள்.

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சாஃப்ட்வேரின் பங்கும் மிகவும் முக்கியம். மறுக்கவோ மறைக்கவோ முடியாது. 

சரி….எது எது பண்ணலாம் ? எது எது பண்ணக் கூடாது ?

பொதுவாக, நீங்கள் எடுத்த படத்தை இன்னும் கொஞ்சம் மெருகூட்டுவதற்காக Light Adjustment, Straightening, Contrast Adjustment, Cropping, Sharpening, Removal of unwanted Elements ( தேவையில்லாத சமாச்சாரங்களை நீக்குதல்) , Adding Logo போன்ற விஷயங்கள் செய்வதில் எந்தத் தவறுமில்லை. இது போன்ற இன்னும் சில அடிப்படை விஷயங்களை NG, BBC, Sony போன்ற பெரிய நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளிலேயே வெளிப்படையாகவே அனுமதிக்கிறார்கள். 

HDR, Stacking, Multi Exposure Shots போன்றவை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி. இதைத் தவறு என்று சொல்வதையும் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.

உங்கள் ஒரிஜினல் படத்தில் இல்லாத ஒன்றை இணைத்து வழங்குவதை வேண்டுமானலும் “கள்ளாட்டம்” என்று சொல்லலாம். உதாரணத்திற்கு மதுரை மேல மாசியில் ஒரு ஜோடியை உட்கார வைத்து ஒரு படத்தை எடுத்து விட்டு, பின் புலத்தில் வங்காள விரிகுடாவை வைத்து ஒரு சன் செட் ஆவது போல எடுப்பது. 

அது கூட Wedding Photography யிலும் Fashion Photography யிலும் செய்தால் தவறில்லை.

பொண்ணு மாப்பிளைக்கோ அல்லது அவர்களின் பெற்றோர்களுக்கோ, மதுரையில் கடல் கிடையாது என்பது தெரியாதா ? ஆனால், அவர்கள் ரசிக்கிறார்கள் என்னும்போது அதைத் தருவதில் தவறில்லை. 

Fashion Photography மற்றும் Advertisement Field இல் அவர்களுடைய முக்கிய வேலையே கிராஃபிக்ஸ்தான். அதைச் செய்யாமல் அவர்களால் பெரிய அளவில் மக்களை ரீச் செய்ய முடியாது. So, அதுவும் தவறில்லை.

அப்போ எதுதான் தவறு ராசா….?

மற்றவர்கள் எடுத்த படத்த சிறு சிறு மாற்றங்கள் செய்து தங்கள் பெயரைப் போட்டு புகழ் தேடிக் கொள்வதை வேண்டுமானாலும் தவறு என்று சொல்லலாம். என்னுடைய படமே மூன்று போட்டிகளில் வென்றிருக்கின்றன. ஆனால், எதிலுமே நான் பங்கு கொண்டதில்லை, அந்தப் பரிசுகளும் என்னை வந்தடையவில்லை. காரணம் அவை என் பெயரில் பங்கு கொள்ளவில்லை. நீங்கள்தான் சொல்ல வேண்டும், அது சரியா என்று. 

நமது படங்களை மற்றவர்கள் கண்களை உறுத்தாமல் செய்யும் அனைத்து ‘டச் அப்’ களும் சரிதான். 

மற்றவர்கள் படங்களை சுடாமல் நாம் சுட்ட படங்களில் செய்யும் சின்ன சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் ஆனைத்தும் சரிதான்.

எனவே, ஃபோட்டோ ஷாப்பா ? உவ்வே.…என்று ஒதுக்கி விடாமல், அதில் உள்ள விஷயங்களையும் கற்றுக் கொண்டு அதை ஒரு லிமிட்டோடு உபயோகிக்க முயற்சியுங்கள்

பிரியமுடன் 

பாலா.