Wildlife Photography க்கு எவ்வளவு பொறுமை தேவை ? 

இந்த இரண்டு கேள்விகளுக்கும் கீழே உள்ள படம்தான் விடை.

இந்தப் படம் நேஷனல் ஜியாக்ரஃபிக் பத்திரிக்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வந்திருந்தது.

இந்தப் படத்தை எடுத்தது, Stephen Wilkes என்னும் ஒரு அமெரிக்கப் புகைப்படக் கலைஞன் . 

எடுத்த இடம் : செரெங்கேட்டி நேஷனல் பார்க், தான்சானியா.

ஸ்டீஃபன், ஒரு 20 அடி உயரத்திற்கு கம்பிகளால் ஆன ஒரு மேடையை அமைத்து ஒரு ஹெவி ட்ரைப்பாடை ஃபிக்ஸ் பண்ணி, Time Lapse முறையில், எப்போதெல்லாம் தோன்றுகிறதோ, எப்போதெல்லாம் நல்ல காட்சி தென்படுகிறதோ, அப்போதெல்லாம் தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டேயிருந்திருக்கிறார்.  ஒவ்வொரு படமும் ஒவ்வொரு செட்டிங்ஸ் – லைட்டிங்கைப் பொறுத்து. இதற்காக அவர் எடுத்துக் கொண்டது, மொத்தம் 30 மணி நேரம். 

எடுத்த புகைப்படங்கள் 2300. கேமராவை ஒரு இம்மி கூட அசைக்கவில்லை. ட்ரைப்பாடும் படு ஹெவி. நான் முன்பு ஒரு முறை சொன்ன ட்ரிக்கைத்தான் இவரும் உபயோகித்திருக்கிறார். ட்ரைப்பாடின் கீழே உள்ள ஹூக்கில் ஒரு பெரிய வெயிட்டை தொங்க விட்டிருக்கிறார் – காற்றினாலோ அல்லது வேறு எந்தவொரு அசைவினாலோ கேமரா ஆடி விடாமலிருக்க.

சாப்பாடு – ப்ரெட், தண்ணீர், சில டின் வகையறாக்கள். 

ஒன்ஸ், டூஸ் போவதற்கு சில டெம்பரரி முறைகள். 

Dedication என்றால் கடுமையான dedication. 

அவர் இருந்த இடம் சிங்கங்களும், முதலைகளும் சர்வ சாதாரணமாக நடமாடுமிடம். நான் அந்த இடத்தை நேரில் போய்ப் பார்த்தபோது ஆடிப் போய் விட்டேன் ஆடி. அவ்வளவு இடுக்கான & ஆபத்தான இடம். அவர் செய்த எல்லா விஷயங்களுக்கும் முறையான அனுமதி வாங்கி ப்ராப்பராகத்தான் செய்திருக்கிறார். 

இனி அவர் சொல்வதைக் கேட்போம். “ நான் அந்த 30 மணி நேரத்தில் கஷ்டம் எதுவும் பட்டதாக உணரவில்லை. நிஜமாகவே என்ஜாய் பண்ணித்தான் அவ்வளவு படங்களையும் எடுத்தேன். ஒவ்வொரு படத்தையும் நன்கு திட்டமிட்டே எடுத்தேன். என்னுடைய நிஜமான வலி ( Pain) Post Processing பண்ண ஆரம்பித்தபோதுதான் ஆரம்பித்தது. அதற்காக நான் எடுத்துக் கொண்டது 6 வாரங்கள். சரியாக சாபிடவில்லை. சரியாகத் தூங்கவில்லை. 

நான் எடுத்த அந்த 2300 படங்களில் நான் செலக்ட் பண்னியது மொத்தம் 72 படங்கள். அந்த 72 படங்களை செலக்ட் பண்ணுவதற்குள் நான் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு சென்று திரும்பினேன். அந்த 72 படங்களும் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒன்றன் மேல் ஒன்றாக ஓவர் லேப் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதில்தான் என் முழுக் கவனமும் இருந்தது. 

அந்த 72 படங்களையும் தனித் தனியே எடிட் செய்து ஃபோட்டோ ஷாப் சி சி யில் Stack ( Photo Merge) செய்து இந்த ஒரே ஒரு படத்தை முடிக்கையில் பெண்களின் பிரசவ வேதனையை உணர்ந்தேன்”.

நீங்கள் இந்தப் படத்தை உற்றுக் கவனித்தீர்களென்றால், சூரிய உதயம், அஸ்தமண நேரம், இரவில் விடி வெள்ளிகள், மதிய நேர நிகழ்ச்சிகள் என்று ஒரு 30 மணி நேரத்தில் கிட்டத்தட்ட எல்லா வகை லைட்டிங்கையும் கவர் பண்ணியிருக்கிறார்.     

இப்ப சொல்லுங்கப்பா…..

யார் யாரெல்லாம் Wildlife Photography க்கு வர ஆசைப்படுகிறீர்கள் ? 

பிரியமுடன் 

பாலா…. 

January 2016 NG Issue