Hyper Focal Length மற்றும்Focus Stacking Methodஎன்றால் என்ன ?
இரண்டு வாரத்திற்கு முன்னால் யாரோ ஒரு நண்பர் Hyper Focal Length
என்றால் என்ன கேட்டிருந்தார். நானும் “இது யாரும் கேட்காத நல்ல கேள்வி. விரைவில் எழுகிறேன்” என்று சொல்லியிருந்தேன்.
ஆனால், சுத்தமாக மறந்தே போய் விட்டது. மன்னிக்கவும்.
சரி …விஷயத்திற்கு வருவோம்.
Hyper Focal Length என்றால் என்ன ?
இது பொதுவாக , Landscape Photography யில் பயன்படுத்தப்படும் வார்த்தை.
நமது ஃபோக்கஸ் பாயிண்டை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து ஃபோக்கஸ் செய்யும்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சப்ஜெக்ட்டுக்கு பின்னும் , சப்ஜெக்ட்டுக்கு முன்னும் உள்ள அனைத்தும் பக்கா ஃபோக்கஸில் வந்தால், நீங்கள் எந்த இடத்தில் இடத்தில் ஃபோக்கஸ் பாயிண்டை நிறுத்தினீர்களோ அதற்குப் பெயர் Hyper Focal Length .
சரி…..அந்த இடத்தை எப்படிக் கண்டு பிடிப்பது ? இண்டர்நெட்டில் போய் தேடினீர்களென்ன்றால், அதற்கு ஒவ்வொருவரும் ஒரு கணித சூத்திரத்தைச் சொல்லுவார்கள். X – Y + Z X A X B 2 என்று. அதற்காக நாம் என்ன கால்குலேட்டரையா ஒவ்வொரு இடத்திற்கும் எடுத்துப் போக முடியும் என்று கேட்பது கேட்கிறது.
அதற்கு ஒரு எளிதான வழி ஒன்று உள்ளது.
கண்ணால் நீங்கள் எடுக்கப் போகும் லேண்ட்ஸ்கேப்பின் மொத்த தூரத்தையும் அளந்து விட்டு, ஒரு குத்து மதிப்பாக மூன்றில் ஒரு பகுதியில் ( 1/3) உங்கள் ஃபோக்கஸ் பாயிண்டை நிறுத்தினீர்களென்றால், அதுதான் பெஸ்ட் Hyper Focal Length . இது பெரும்பாலான இடங்களில் மிகச் சரியாக இருக்கும். நான் ஒரு சேஃப்டிக்கு மல்ட்டி ஃபோக்கஸ் பாயின்ட்ஸையும் ஆன் பண்ணி வைத்துக் கொண்டு, அதில் சில பாயிண்ட்களாவது 1/3 இல் நன்றாக ஃபோக்கஸில் வருமாறு பார்த்துக் கொள்வேன்.
இதற்கு உங்கள் அப்பெர்ச்சர் f11 அல்லது அதற்கும் மேலாக f 16 அல்லது f22 இருக்க வேண்டும் . உங்களுடைய லென்ஸும் வைட் ஆங்கிளாகவோ அல்லது சூப்பர் வைட் ஆங்கிளாகவோ இருந்தால் இந்த 1/3 தூரம் மிக நன்றாக வேலை செய்யும். குறைந்த பட்சம் 50 மிமி லென்ஸாவது இருக்க வேண்டும். அதற்கு மேல் போகுமானல், பேசாமல் ஒரு கால்குலேட்டரை பாக்கெட்டில் வைத்திருப்பது, அந்த ஃபார்முலாவை மனப்பாடம் செய்து கொள்வதும் நலம்.
இது தவிர Focus Stacking Method என்று உள்ளது. ஒரே ஃபிரேமை வெவ்வேறு இடத்தில் ஃபோக்கஸ் செய்து நிறைய படங்கள் எடுத்து அவற்றை ஃபோட்டோஷாப்பில் Stack செய்வது . இதில் End Result அமர்க்களமாய் இருக்கும். விளம்ப்பரத்துறையில் இருக்கும் புகைப்படக் கலைஞர்கள் இந்த உக்தியை அதிகம் பயன்படுத்துவார்கள்.
பிரியமுடன்
பாலா.