Wildlife Photography க்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்த சப்ஜெக்ட்  Night Light Photography தான் . காரணம் , Wildlife Photography போல இது ஒன்றும் கஷ்டம் கிடையாது. ஓரளவிற்கு ஈஸியான சப்ஜெக்ட்தான். 

கொஞ்சம் ப்ளான் பண்ணினால் ரிசல்ட் 100% கியாரண்டி. கவலையே பட வேண்டியதில்லை. 

சரி….எப்படி ப்ளான் பண்ணுவது…. 

எந்த இடத்திற்கு சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும் என்று முன்னரே அந்த இடத்திற்கு சென்று ஒரு ஸ்கௌட்டிங் செய்து கொள்ள வேண்டும். இது தேவையில்லாத  சர்ப்ரைஸ்களைத் தவிர்க்க உதவும். 

எந்த நேரத்திற்கு சூரியன் மறையும், எந்த நேரத்திற்கு சூரியன் உதயமாகும் போன்ற விபரங்களை இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். கோடை காலத்தில் ஐரோப்பாவிற்கு சென்றால் இரவு 11 மணி வரை சூரிய அஸ்தமனத்திற்காக நீங்கள் தவம் இருக்க வேண்டும். 

குளிரான இடங்களுக்கு சென்றால் தேவையான அளவிற்கு கதகதப்பான உடைகளும்  க்ளவ்சும் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், குளிரில் விறைத்து கன்னா பின்னாவென்று அவஸ்தைப்பட வேண்டும் – நான் சைனாவில் போய்  அவஸ்தைப் பட்டதைப்போல. அந்தப் படத்தை வரும் நாட்களில் ஒரு  நாளில் பதிவிடுகிறேன் ( அதில் ஒரு படத்தை எனக்குத் திருப்தியாக வருவரை எடுக்க எனக்கு 4 மணி நேரம் ஆனது. Temperature மைனஸ் 10 என்று ஞாபகம். க்ளவ்சும் இல்லாமல் நல்ல ஜாக்கெட்டும் இல்லாமல் …அது ஒரு கொடுமையான அனுபவம். காரணம், என்னுடைய ப்ளானில் அந்த இடம் இல்லை. அது அழகாகத் தெரிந்ததால், டமாலென்று முடிவெடுத்து அந்த இடத்தில் இறங்கியது என் தவறு ).

மழைக்காலமாக இருந்தால் ஒரு நல்ல குடை ரொம்ப ரொம்ப அவசியம்.

சில இடங்களில் அவர்களின் முறையான அனுமதியைப் பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் உங்களின் கேமராவை வாங்கி அனைத்துப் புகைப்படங்களையும் டெலிட் செய்து விடுவார்கள். எனக்கு அந்த அனுபவம் ரஷ்யாவில் கிடைத்தது. அது ஒரு மிலிட்டரி கேம்ப் என்று தெரியாமலேயே, அதை வளைத்து வளைத்து எடுத்தேன். தற்செயலாக என்னைப் பார்த்த ஒரு செக்யூரிட்டி ஆஃபிஸர் என்னைப் பிடித்து ஏராளமான கேள்விகள் கேட்டு, நான் நெஜமாகவே (???) அப்பாவிதான் என்று புரிந்து கொண்டு, என்னுடைய கேமராவைப் பிடுங்கி அதில் உள்ள ஃபிலிம் ரோலை உருவி அதை என் கையிலேயே கொடுத்தார் ( ம்க்கும்….ரொம்ப முக்கியம். என் பெயரைச் சொல்லி வெச்சுக்கங்கடா என்று சொல்லத்தான் ஆசை. ஆனால், ஒண்ணும் சொல்லாமல்,எதற்கு வம்பு என்று அதை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்). 

அதே போல், பகலுக்கும் இரவிற்கும் இடைப்பட்ட நேரம் என்று ஒன்று உண்டு. அதற்குப் பெயர் Twilight Condition. அந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு நல்ல ஃபிரேம் கிடைத்து விட்டால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. நான், இதற்காக ரொம்பவே மெனக்கெடுவேன்…

சரி …விஷயத்திற்கு வருவோம்….

Night Light Photography க்கு கேமராவிற்கு அடுத்து மிகவும் முக்கியமான விஷயம் ஹெவி ட்ரைப்பாட். நான் ட்ராவல் பண்ணும்போது என்னுடைய லைட் ட்ரைப்பாடைத்தான் எடுத்துச் செல்வேன். அப்போதெல்லாம், இரவில் ஏதேனும் படம் எடுக்கும் அவசியம் வந்தால், ட்ரைப்பாடின் கீழே உள்ள ஹூக்கில் ஒரு பையை மாட்டி அதில் நிறைய கற்களைப் போட்டு விடுவேன். அது ஆட்டோமேட்டிக்காக ஹெவி ட்ரைப்பாடாக மாறி விடும். காற்று எவ்வளவு வேகமாக வீசினாலும் அசைந்து கொடுக்காது. 

Mirror Lock Option ஐ ஆன் செய்து விடுவேன். இது நமக்குத் தெரியாத லேசான அதிர்வைத் தவிர்க்க உதவும் .

Manual Mode தான் Night Light Photography க்கு பெஸ்ட். முதலில் ISO – வை செட் பண்ணி விடுவேன். என்னுடைய சாய்ஸ் 100 அல்லது 200 தான். இது Noise ஐ முற்றிலுமாகத் தவிர்க்க உதவும். Aperture 5.6 அல்லது f8 – எனக்குத் தேவையான Depth of Field ஐப் பொறுத்து இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து விடுவேன். 8 க்கும் மேல் போனால் Light Bleeding என்று சொல்லப்படும் ஒளிச்சிதறல் உங்கள் படத்தைப் பாழாக்கி விடும். 

Available Lighting condition ஐப் பொறுத்து ஸ்பீடை செலக்ட் செய்து விட்டு உள்ளிருக்கும் மீட்டரையோ அல்லது லைவ் ஷூட்டில் போட்டு விட்டு டிஸ்ப்ளே ஸ்க்ரீனிலோ செக் பண்ணி விட்டு, கேமராவை Multifocus Point Option ஐ ஆன் செய்து விட்டு ஓரிரு படங்கள் எடுப்பேன். எடுத்தவுடன் , நான் முதன் முதலில் செக் பண்ணுவது படம் ஃபோக்கஸில் வந்திருக்கிறதா என்றுதான் . படம் ஃபோக்கஸில் வராவிட்டால், Manual Focus Option க்குத் தாவி விடுவேன். இது கண்ணுக் கொஞ்சம் ஸ்ட்ரெயின் என்றாலும் கூட , அக்யூரஸி லெவல் ஜாஸ்தி.  

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு மிக முக்கியமான விஷயங்கள்.

  1. Long Exposure Noise Reduction என்று ஒரு Option இருக்கும். செட்டிங்கில் போய் அதை ஆன் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும். இது Noise ஐக் கொஞ்சம் கூட வராமல் பார்த்துக் கொள்ளும். ஆனால், இந்த செட்டிங் பேட்டரியை பியர் போலக் குடிக்கும். எனவே, ஒரு எக்ஸ்ட்ரா பேட்டரி வைத்துக் கொள்வது உசிதம்.   
  • இரண்டாவது, க்ளிக் பட்டனை உடனே க்ளிக் பண்ணி விடாமல், ஃபோகஸை லாக் செய்து விட்டு , 2 செகண்ட் டைமரில் போட்டு விட்டு எடுத்தால், இருக்கும் கொஞ்ச நஞ்ச Shake ம்  avoid ஆகி விடும்.  

பிரியமுடன் 

பாலா…