இது ஒரு சுலபமான & அருமையான டெக்னிக்….

நீங்கள் ஒரு ஆப்ஜெக்ட்டை தேர்ந்தெடுத்து விட்டு அதை இருட்டில் வைத்து , நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒளியைப் பாய்ச்சி விட்டு, அதை எடுப்பது. 

முதலில் நல்ல வெளிச்சத்தில் ஃபோக்கஸ் பண்ணி விட்டு, Manual Focusக்கு மாற்றி ஃபோக்கஸ் லாக் பண்ணிக் கொள்ள வேண்டும். 

பிறகு ட்ரையல் & எர்ரர் மெத்தட்தான். 

சரி…எங்கிருந்து தொடங்குவது  ? 

நான் எப்படி எடுக்கிறேன் என்று சொல்கிறேன். பிடித்திருந்தால் அதை ஃபாலோ பண்ணுங்கள். இல்லையென்றால், வேறொரு எளிய முறை தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள். சரியா ?

நான் முதலில் நல்ல வெளிச்சத்தில் ஃபோக்கஸ் பண்ணி விட்டு, ஃபிரேமை செட் பண்ணிக் கொள்வேன். பிறகு லைட்டை ஆஃப் பண்ணி விட்டு, டார்ச் லைட்டாலோ அல்லது மொபைல் ஃபோனில் உள்ள லைட்டாலோ, யாரையாவது விட்டு ஒரு பக்கம் வெளிச்சத்தை விட்டு விட்டு பாய்ச்ச சொல்லி விட்டு, கேமராவை முழு ஆட்டோவில் போட்டு சில ட்ரையல் ஷாட்ஸ் எடுத்துக் கொள்வேன். பெரும்பாலும் அவை கேவலமாகத்தான் வரும். 

ஆனால், அதில் உள்ள ரீடிங்கையும் அதன் ரிசல்ட்டையும் பார்க்கும்போது ஒரு நல்ல ஐடியா கிடைத்து விடும். அப்புறம் , கேமராவை மேனுவல் மோடுக்கு மாற்றி விட்டு , வெவ்வேறு செட்டிங்கில் நாலைந்து படங்கள் எடுப்பேன். ஓரளவிற்கு எல்லாமே நன்றாகத்தான் வரும். அதில் எனக்கு பிடித்த ஷாட்டை செலக்ட் செய்து கொள்வேன்.

அதேபோல், உங்கள் லைட் சோர்ஸுக்கு முன்னால் கலர் ஜெல் பேப்பர்களைப் பிடுத்துக் கொண்டீர்களானால், உங்கள் ஆப்ஜக்ட் கலர்ஃபுல்லாக வரும் – நான் இங்கே பதிவிட்டுள்ள நாயக்கர் மஹால் போல. ஆனால், நாயக்கர் மஹாலில் அவர்களே அந்த வேலையைச் செய்வார்கள். நமக்கு இன்னும் ஈஸி.

செட்டிங்க்ஸ் : 

முட்டை : 

ISO : 200 

Manual Mode : 

F 6.3 & Speed : 0.2 Sec 

In Photoshop : I reduced the highlight a bit 

Camera : 7 D with 18- 135 MM Kit Lens

நாயக்கர் மஹால்…

ISO : 400 

F 3.5 & Speed : 8 Sec. On a heavy Tripod 

Did a little light correction in Photoshop…

Camera : Canon 7D with 18- 135 MM