நான் முன்பு விளக்கிய Annual Migration of Wildebeests – இன் ஒரு பகுதிதான் இந்தப் படம்.

ஏன் இந்தச் சகோதரன் இப்படி கோக்கு மாக்காக விழுகிறான் என்று தோணுகிறதா ? 

இவருக்கு கடைசி நேரத்தில், உயரத்தைப் பார்த்து பயம் வந்து விட்டது. எனவே திரும்பிப் போகலாம் என்று முடிவு செய்து திரும்ப எத்தனிக்கையில் பின்னால் வந்த நண்பர்கள் “ Sorry my friend. It is now too late “ என்று இவரைத் தள்ளி விட்டு விட்டார்கள். 

விழுந்ததில் ஒரு கால் உடைந்து அங்கேயே உட்கார்ந்து விட்டார். அதே போல் இன்னொருவரும் அங்கேயே விழுந்து கிடப்பதை இந்தப் படத்தில் காணலாம். 

எனக்கு , வ்யூ ஃபைண்டரில் இந்தப் படத்தை எடுக்கையில், ஒரு படத்தில் வடிவேலு ஒரு கிணற்றில் குதித்து யாரையோ காப்பாற்றி விட்டு வெளியில் வந்து “ யாருடா என்னைக் கிணற்றுக்குள் தள்ளி விட்டது என்று கேட்பாரே”, அதுதான் ஞாபகத்திற்கு வந்தது.  

வெ.பாலமுரளி