Bird Photography – 10 

பறப்பனவற்றை, (நாம்) ஊர்வனவாக மாறி புகைப்படம் எடுத்தால், நல்ல லோ ஆங்கிளில் அருமையான ஷாட்ஸ் கிடைக்கும்.

என்ன….வீட்டிற்கு திரும்பும்போது டார்ஜான் மாதிரி நம் உடம்பு முழுவதும் சேறும் சகதியுமாக இருக்கும்.

மனைவியிடம் நல்ல திட்டு ( சில சமயம் அடிகள்) வாங்க நேரிடும். முதல் தடவை, பயங்கர கோபம் வரும். எதிர்த்துப் பேசிவிடுவோமா என்று கூடத் தோன்றும். அப்படிப் பேசினாலோ கையை ஓங்கினாலோ, எதிர் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல

ஆனால், போகப் போகப் பழகி விடும் ( அனுபவம்….அனுபவம்…).

இதற்கும் அந்தப் பாழாய்ப் போன பொறுமைதான் அவசியம். இஞ்ச் இஞ்சாக ஊர்ந்து செல்ல வேண்டும். சில பெரிய ஃபோட்டோகிராஃபர்கள் , நிஜப் புதர் போலத் தோற்றமளிக்கும் செடி கொடிகளை தலையில் போட்டு மறைத்துக் கொண்டு ஊர்ந்து சென்று படம் பிடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து, ஒரு அமெரிக்கப் புகைப்படக் கலைஞன் ஒரே ஒரு பறவையை லோ ஆங்கிளில் எடுக்க 4 மணி நேரம் செலவிட்டான். உண்மையிலேயே ஒரே ஒரு படம்தான். நேரில் பார்க்க நேர்ந்த போது ஆடிப் போய் விட்டேன் ஆடி. அதற்குப் பெயர்தான் டெடிகேஷன்.

மற்றபடி செட்டிங்ஸெல்லாம் ஒரே மாதிரித்தான்.Shutter Priorty, Spot/ Centre Weighted Metering, 1- 5 Focusing points (all centered ), Silent Burst, ISO 200- 400 ( இது என்னுடைய சாய்ஸ். நீங்கள் Available Lighting Condition ஐப் பொறுத்து மாற்றிக் கொள்லலாம். உங்கள் கேமரா எவ்வளவு ISO வரை Noise இல்லாமல் எடுக்கும் என்பதைப் பொறுத்து கொஞ்சம் கூட்டிக் கொள்ளலாம்.

கேமராவைத் தரையோடு தரையாக வைத்து எடுக்கும்போது ஃபிரேமைச் சாய்க்காமல் நேர்கோட்டில் கொண்டு வருவது கொஞ்சம் சிரமம். ஆனால், தொடர்ந்து ப்ராக்டீஸ் செய்தால் முடியாதது என்று ஒன்றுமில்லை. 

அடுத்த முறை முயற்சிக்கவும்…..வாழ்த்துக்கள்.

இத்துடன்…பறவைகள் பற்றி முடித்துக் கொள்கிறேன்….

விரைவில் “ படம் சொல்லும் கதைகள் “ …..

பிரியமுடன் 

பாலா….