Bird Photography – 9

Bird Photography – யிலும் Candid Shots எடுக்க முடியும்.

நான் முதல் கட்டுரையில் சொன்னது பொறுமை.

 நேற்று கட்டுரையில் சொன்னது “ மகாப் “ பொறுமை.

ஆனால், Bird Photography – யில் Candid Shots எடுக்கத் தேவையானது “ உலக மகாப்” பொறுமை. 

உங்களால் ஒரு பறவையையோ அல்லது இரண்டு மூன்று பறவைகளையோ, அவைகளை தொந்தரவு செய்யாமல் பின் தொடர முடிந்தால், நல்ல Candid Shots சாத்தியம்.

எனக்கு அந்த மாதிரியான சந்தர்ப்பம் சில முறை வாய்த்திருக்கிறது. நான் வழக்கம்போல், ISO – வை செட் பண்ணிக் கொள்வேன்.

எனக்கு Freezing Shot ( High Speed ) வேண்டுமா இல்லை Blured Shot ( Slow shutter speed) வேண்டுமா என்பதைப் பொறுத்து ஸ்பீடை செட் பண்ணிக் கொள்வேன். இதிலும் என்னுடைய சாய்ஸ் Shutter Priority தான். 

Metering – Centre Weighted Average அல்லது Spot Metering – ஐ பறவையின் சைஸைப் பொறுத்து மாற்றிக் கொள்வேன்.

கேமராவை Silent Burst Mode – இல் வைத்துக் கொண்டு பொறுமையாகவும், மெதுவாகவும் அவற்றை ஃபாலோ பண்ண ஆரம்பித்து விடுவேன். அதனுடைய சின்ன சின்ன அசைவையும் Burst Mode இல் தட தடவென்று எடுத்துக் கொண்டேயிருப்பேன். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல Candid Shots கிடைத்து விடும். 

சில சமயம், வெகு நேரம் ஃபாலோ அப் பண்ணிய பிறகும், அது ஸ்பெஷல் போஸ் எதுவும் கொடுக்காமல் பறந்து விடும். அப்போது எதுவுமே நடக்காதது போல முகத்தைத் துடைத்துக் கொண்டு நகர்ந்து விடுவேன் ( அதுதான் நமக்கு நல்லாவே வருமே ).

பிரியமுடன் 

பாலா