இந்தப் படத்தில் இருக்கும் வரிக்குதிரையைக் கவனித்தீர்களா ? பின்புறம் குதறப்பட்டிருக்கிறது. இந்த வேலையைச் செய்தது கழுதைப் புலி.

கழுதைப்புலி ஒரு வித்தியாசமான விலங்கு. முன்னங்கால்கள் நீளமாகவும் பின்னங்கால்கள் குட்டையாகவும் மிகவும் வினோதமாக இருக்கும். 

இந்த வித்தியாசத்தால் கெந்தி கெந்தித்தான் ஓடும். பெரிதாக வலிமையெல்லாம் கிடையாது. ஆனால், அசாத்திய தைரியம் உடையது. அது மட்டுமல்லாது, குள்ள நரியை விட 100 மடங்கு தந்திரமானது. கும்பலாக மட்டுமே வேட்டையாடும். அவை கும்பலாக வந்தால் சிங்கம் , சிறுத்தையெல்லாம் ஒரே ஓட்டம்தான். அதை Lion King படத்தில் நன்றாகக் காண்பித்திருப்பார்கள்.

அதே போல், சிங்கம், சிறுத்தை மற்றும் சிறுத்தைப் புலிகளின் குட்டிகளுக்கு இவைதான் எமன். கழுதைப் புலிகளிடமிருந்து தங்கள் குட்டிகளைக் காப்பாற்றுவதற்கு அவை போராடும் போராட்டம் மிகவும் பரிதாபமாக இருக்கும் ( வாழ்க்கை வட்டம்டா ).  

அவை தனியாக சில சமயம் வேட்டையாட ஆசைப்படும் . வெற்றி பெற முடியாத பட்சத்தில் சும்மா ஸ்நாக்ஸூக்காக  அப்பிராணி விலங்குகளின் பின்புறத்தை கடித்துக் குதறி விடும். அவைகளும் தலைக்கு வந்தது உட்காரும் இடத்தோடு போனதே என்று சந்தோஷப் பட்டு ஓடி விடும். 

வனங்களிலும் இது போன்ற கண்ணீர்க் கதைகள் ஏராளம்.

பிரியமுடன்

பாலா.