இந்தப் படத்தை 2012 இல் அம்போசலி நேஷனல் பார்க்கில் எடுத்தேன். 

இதுபோல அடிக்கடி தூசுப் படலம் இந்தக் காட்டைச் சூழ்ந்து விடும். அப்போது நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர முடியாது. நீங்கள் செல்லும் பாதைகள் அனைத்தும் மூடி விடும். அப்படியே ஒரு அசட்டுத் துணிச்சலுடன் நாம் சென்றாலும், ஏதேனும் ஒரு யானை மேல் மோத நேரிடலாம். சொந்தக் காசில் எதற்கு சூனியம் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் நின்று விடுவது பெட்டர்.

இந்தத் தூசுப் படலம் சில சமயம் மணிக்கணக்கில் நீளும். இந்தப்படத்தை எடுக்கும் போது நானும் என்னுடைய நண்பரும் இரண்டரை மணி நேரம் மாட்டிக் கொண்டோம். 

நான் இந்தப் படத்தை எடுக்கும்போது இந்தத் தூசிப் புயல் ஆரம்பித்து ஒரு 5 நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். அடுத்த 5 நிமிடத்தில் கிட்டத்தட்ட எல்லாமே மறைந்து விட்டன. அந்த இரண்டரை மணி நேரம் வாழ்க்கையில் மிகவும் கொடுமையானவை. 

எப்போது அது விலகும் என்றே தெரியாமல் திக் திக்கென்றிருந்தது.  காரில் பிஸ்கெட்டுகளும், தண்ணீரும்  இருந்ததால் ஏதோ சமாளித்தோம்….

கடந்த 25 வருடங்களில் இது மாதிரி ஏராளமான “திக் திக் “ குகள் – கென்ய வனங்களில். 

சில சமயம் நினைத்துப் பார்த்தால் திகிலாக இருக்கும்.

பிரியமுடன்

பாலா