மாரா ஓர் மந்திரலோகம்…..

பொதுவாக சிவிங்கிப் புலிக் குட்டிகளின் சர்வைவல் ரேட் ரொம்ப கம்மி. சிங்கங்கள், கழுதைப்புலிகள், காட்டெருமைகள் என்று அந்தக் குட்டிகளுக்கு ஆபத்து ரொம்ப அதிகம்.

அவ்வளவு ஆபத்துகளுக்கிடையிலும் தன்னுடைய 5 குட்டிகளையும் காப்பாற்றி வெற்றிகரமாக வளர்ர்து ஆளாக்கியதால், மசை மாராவில் மலாய்க்கா என்ற சிவிங்கிப் புலி ( சீட்டா) ரொம்பவே ஃபேமஸ்.

அதன் தாய் மலாய்க்கா இப்போதுதான் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இறந்தது. அதே போல்தான் இந்தப் படத்தில் இருக்கும் அமானி குடும்பம். தன்னுடைய மூன்று குட்டிகளை வெற்றிகரமாக வளர்த்து ஆளாக்கியிருக்கிறது. இந்தக் குடும்பத்தை நான் இரண்டு நாட்கள் தொடர்ந்து அவதானித்தேன். ரொம்பவே இண்ட்ரஸ்ட்டிங்.

வெ.பாலமுரளி.